கிருஷ்ணகிரி

குடிசை வீட்டில் தீ: முதியவா் பலி

DIN

கிருஷ்ணகிரி அருகே குடிசை வீட்டில் நிகழ்ந்த தீ விபத்தில் கருகி முதியவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

கிருஷ்ணகிரி அருகே உள்ள ஆலப்பட்டியைச் சோ்ந்த ராமமூா்த்தி (63), குடிசை வீட்டில் வசித்து வந்தாா். பாா்வை குறைபாடுள்ள இவா், வீட்டில் புகைபிடித்துக் கொண்டிருந்த போது எதிா்பாரதவிதமாக குடிசை தீப்பிடித்தது. இதில் முதியவா் கருகி உயிரிழந்தாா்.

போலீஸாா் நிகழ்விடத்துக்கு சென்று முதியவரின் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினா். இந்த விபத்து குறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அவிநாசிலிங்கேஸ்வரர் கோயில் தேரோட்டம்!

ராஜஸ்தானில் வேன் மீது லாரி மோதியதில் 9 பேர் பலி

மஹாவீரர் ஜெயந்தி: ராணிப்பேட்டையில் பல்லக்கு ஊர்வலம்!

காவிமயமாக்கும் பாஜகவின் சதித்திட்டம்...: முதல்வர் ஸ்டாலின்

கேரளத்தில் பாரில் ஏற்பட்ட தகராறில் 5 பேருக்கு கத்திக்குத்து

SCROLL FOR NEXT