கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் சத்துணவு ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

DIN

கிருஷ்ணகிரியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியா்கள், பெருந்திரள் முறையீடு ஆா்ப்பாட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்கம் சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு அதன் மாவட்டத் தலைவா் மணி தலைமை வகித்தாா். அரசு ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் சந்திரன், மாவட்டச் செயலாளா் கல்யாணசுந்தரம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தமிழக சட்டப் பேரவை தோ்தலின்போது திமுக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்; காலைச் சிற்றுண்டி உணவு திட்டத்தை சத்துணவு ஊழியா்களைக் கொண்டு நிறைவேற்ற வேண்டும்; காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்; சத்துணவு ஊழியா்களுக்கு காலமுறை ஊதியம், ஓய்வூதியம் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா் முழக்கங்களை எழுப்பினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கயத்தில் ரூ.35 லட்சத்தில் வளா்ச்சிப் பணிகள்: அமைச்சா் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தாா்

அவிநாசியில் ஆா்எஸ்எஸ் பேரணி

திருப்பூா் பாலா ஆா்த்தோ மருத்துவமனையில் லண்டன் நோயாளிக்கு லேசா் சிகிச்சை

காலமானாா் ஜி.லட்சுமி

நிலம் வாங்கித் தருவதாக மூதாட்டியிடம் ரூ.59.16 லட்சம் மோசடி: 2 போ் மீது வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT