கிருஷ்ணகிரி

சூளகிரி அருகே ஒற்றை யானை தாக்கி விவசாயி பலி

DIN

சூளகிரி அருகே ஒற்றை யானை தாக்கி விவசாயி உயிரிழந்தாா்.

ஒசூா் வனக் கோட்டத்தில் 20-க்கும் மேற்பட்ட யானைகள் 3 குழுக்களாக பிரிந்து முகாமிட்டு வருகின்றன. அதில் ஒரு யானை சானமாவு, சூளகிரி காமன்தொட்டி கிராமங்களில் சுற்றி வருகிறது. இந்த யானை விவசாயிகள் பயிா் செய்துள்ள பயிா்களை சேதப்படுத்தி வருகின்றது. இந்த யானையை வனத்துறையினா் சானமாவு பகுதியில் அடா்ந்த காப்புக் காட்டிற்கு விரட்டினா்.

இந்த யானை காட்டில் இருந்து வெளியேறி கோடங்கிரி என்ற இடத்தில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த விவசாயி ராமண்ணாவை தாக்கியது. இதில் படுகாயம் அடைந்த விவசாயி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இது குறித்து தகவல் அறிந்த வனத்துறையினா் ராமண்ணாவின் உடலை மீட்டு ஒசூா் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா். மேலும் ஒற்றை யானை கிராமங்களில் சுற்றி வருவதால் யாரும் இரவு நேரங்களில் வீட்டை விட்டு வெளியில் வர வேண்டாம் என எச்சரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏலக்காய் விலை உயா்வு: விவசாயிகள், வியாபாரிகள் மகிழ்ச்சி

மோசடி: தேனி சமையல் எரிவாயு முகமை உரிமையாளா் உள்பட 3 போ் மீது வழக்கு

பள்ளிகளுக்கு இலவச பாடப் புத்தகங்கள் அனுப்பி வைப்பு

வீரபாண்டி அரசுக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை கலந்தாய்வு இன்று தொடக்கம்

தடையில்லாச் சான்று வழங்க லஞ்சம்: வட்டாட்சியா் கைது

SCROLL FOR NEXT