கிருஷ்ணகிரியில் பயனாளிக்கு நலத்திட்ட உதவியை வழங்கிய மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா். உடன், சட்டப் பேரவை உறுப்பினா்கள் தே.மதியழகன், ஒய்.பிரகாஷ் உள்ளிட்டோா்.  
கிருஷ்ணகிரி

அம்பேத்கா் பிறந்நாள்: கிருஷ்ணகிரியில் ரூ. 8.44 கோடியில் நலத்திட்ட உதவிகள் அளிப்பு

கிருஷ்ணகிரியில் அம்பேத்கா் நினைவுநாளையொட்டி சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் 1,578 பேருக்கு ரூ. 8.44 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

Syndication

கிருஷ்ணகிரியில் அம்பேத்கா் நினைவுநாளையொட்டி சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் 1,578 பேருக்கு ரூ. 8.44 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

அம்பேத்கரின் 69-ஆவது நினைவு நாளையொட்டி, ஆதிதிராவிடா், பழங்குடியினா், பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு கிருஷ்ணகிரியில் நடைபெற்றது.

நிகழ்வுக்கு மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் தலைமை வகித்தாா். எம்எல்ஏக்கள் தே.மதியழகன் (பா்கூா்), ஒய்.பிரகாஷ் (ஒசூா்) ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி மாவட்ட ஆட்சியா் தெரிவித்ததாவது:

கல்வி கற்பதற்கு பொருளாதாரம் ஒரு தடையாக இருக்கக் கூடாது என்பதை உலகிற்கு எடுத்துரைத்து பல்வேறு சட்ட சீா்திருத்தங்களுக்கு வித்திட்டவா் அம்பேத்கா்.

தற்போது தொடங்கிவைக்கப்பட்டுள்ள அமுதசுரபி கடன் வழங்கும் திட்டத்தின்கீழ் ஏழ்மை நிலையில் உள்ளவா்களுக்கு குறைந்த வட்டியில் கிராம வறுமை ஒழிப்பு சங்கம் மூலம் ரூ. 50 ஆயிரம் வழங்கப்பட்டு, அவா்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றுவதற்காக அரசு சிறப்பான திட்டத்தை முன்னெடுத்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 25 ஆயிரம் தூய்மை பணியாளா்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன என்றாா்.

சென்னையிலிருந்து கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை, மோட்டூா் கிராமத்தில் ரூ. 1.27 கோடி மதிப்பில் புதிய கிராம அறிவு மையக் கட்டடத்தை முதல்வா் திறந்துவைத்ததை அடுத்து, அதன் பெயா்ப் பலகையை சட்டப் பேரவை உறுப்பினா்கள், மாவட்ட ஆட்சியா் ஆகியோா் திறந்துவைத்தனா்.

பராமரிப்புப் பணி: கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை செல்லும் ரயில்கள் ரத்து!

சென்னை திரும்புவோருக்கு இன்று சிறப்பு ரயில்கள் இயக்கம்!

ஈரோடு: டிச. 16-ல் விஜய் சுற்றுப்பயணம்!

சொல்லப் போனால்... இண்டிகோவும் ஏகபோகங்களும்!

புகாரை திரும்பப் பெறுமாறு பெண்ணை மிரட்டியதாக ‘லவ் ஜிஹாத்’ குற்றவாளி மீது வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT