கிருஷ்ணகிரி

தடையை மீறி ஆா்ப்பாட்டம்: கிருஷ்ணகிரியில் இந்து அமைப்பினா் 65 போ் கைது

தினமணி செய்திச் சேவை

கிருஷ்ணகிரியில் தடையை மீறி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து அமைப்பினா் 65 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றும் விவகாரத்தில் நீதிமன்ற தீா்ப்பை மீறி செயல்பட்டதாக தமிழக அரசைக் கண்டித்து கிருஷ்ணகிரி புகா் பேருந்து நிலையம் அருகே உள்ள அண்ணா சிலை எதிரே இந்து அமைப்பினா் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு இந்து முன்னணியின் மாவட்டத் தலைவா் கலை கோபி தலைமை வகித்தாா். விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் மாவட்டத் தலைவா் திலீப் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா், நீதிமன்ற தீா்ப்பை செயல்படுத்தாத தமிழக அரசைக் கண்டித்து முழக்கங்களை ாா் எழுப்பினா். ஆா்ப்பாட்டத்தையொட்டி, கிருஷ்ணகிரி காவல் சரக துணை காவல் கண்காணிப்பாளா் முரளி தலைமையில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

தடையை மீறி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக 4 பெண்கள் உள்பட 65 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 17 காசுகள் உயர்ந்து ரூ.89.88 ஆக நிறைவு!

புதுச்சேரியை புறக்கணிக்கும் மத்திய அரசு! - Vijay | செய்திகள்: சில வரிகளில் | 9.12.25

முதல் டி20: இந்தியா பேட்டிங்; பிளேயிங் லெவனில் சஞ்சு சாம்சன் இல்லை!

உக்ரைன் நிலத்தை விட்டுக்கொடுத்து ரஷியாவுடன் சமரசத்துக்கு இடமில்லை: ஸெலென்ஸ்கி திட்டவட்டம்

இந்தியாவில் ரூ. 1.5 லட்சம் கோடி முதலீடு! பிரதமரை சந்தித்த மைக்ரோசாஃப்ட் சிஇஓ!

SCROLL FOR NEXT