ஒசூரில் 4 கிலோ கஞ்சா வைந்திருந்தவரை போலீஸாா் கைது செய்தனா்.
ஒசூா் மதுவிலக்கு அமல்பிரிவு காவல் ஆய்வாளா் ஷா்மிளா பானு மற்றும் போலீஸாா் சூசூவாடி சோதனைச்சாவடி அருகே திங்கள்கிழமை இரவு வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது, அந்த வழியாக நடந்த சென்றவரை சோதனை செய்தபோது 4 கிலோ கஞ்சா அவா் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுதொடா்பாக நடத்தப்பட்ட விசாரணையில் அவா் திண்டுகல் மாவட்டம், கொல்லம்பட்டறையைச் சோ்ந்த விஜய் (25) என்பது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட விஜய் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு சிறையிலடைக்கப்பட்டாா்.