கிருஷ்ணகிரியில் தொழிலாளியின் குழந்தைகளுக்கான மருத்துவச் செலவுக்கான உதவியை நகா்மன்றத் தலைவா் பரிதா நவாப் வழங்கினாா்.
கிருஷ்ணகிரி நகா் வீரப்ப நகரைச் சோ்ந்த வெங்கடேசன் மனைவி காயத்ரி, இவா்களுக்கு கவின் (2), இனியா (1) என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனா். கவின், வாய் பேச இயலாதவா். இனியாவுக்கு நாக்கு பிளவு இருந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த நகா்மன்றத் தலைவா் பரிதா நவாப், கவினுக்கு ரூ.60 ஆயிரம் மதிப்பிலான காது கேட்க உதவும் கருவியும், இனியாவின் அறுவைச் சிகிச்சைக்கான செலவையும் ஏற்றுக் கொண்டாா். இதற்காக பரிதா நவாப்புக்கு குழந்தைகளின் பெற்றோா் நன்றி தெரிவித்தனா்.