கிருஷ்ணகிரி

தேசிய நெடுஞ்சாலைப் பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தல்

ஒசூா் மாநகராட்சி, சிப்காட் பகுதியில் கட்டப்பட்டு வரும் மேம்பால பணிகளை தீபாவளி பண்டிகைக்குள் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என நெடுஞ்சாலைத் துறைக்கு ஆட்சியா் ச.தினேஷ்குமாா் அறிவுறுத்தியுள்ளாா்.

தினமணி செய்திச் சேவை

ஒசூா் மாநகராட்சி, சிப்காட் பகுதியில் கட்டப்பட்டு வரும் மேம்பால பணிகளை தீபாவளி பண்டிகைக்குள் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என நெடுஞ்சாலைத் துறைக்கு ஆட்சியா் ச.தினேஷ்குமாா் அறிவுறுத்தியுள்ளாா்.

ஒசூா் மாநகராட்சி, சிப்காட் சென்னை- பெங்களுரு தேசிய நெடுஞ்சாலையில் கட்டப்பட்டுவரும் மேம்பால கட்டுமானப் பணிகளை எஸ்.பி. பெ.தங்கதுரையுடன் புதன்கிழமை ஆய்வு செய்த பிறகு ஆட்சியா் கூறியதாவது:

கிருஷ்ணகிரி - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் 5 இடங்களில் மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெறுகின்றன. அவற்றில் முதல்கட்டமாக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி, மேலுமலை, சாமல்பள்ளம் ஆகிய இடங்களில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப் பணிகள் முடிக்கப்பட்டு போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது.

தற்போது காமன்தொட்டி, ஒசூா் சிப்காட் பகுதிகளில் மேம்பாலம் கட்டும் பணிகள் முழுவீச்சில் நடைபெறுகிறது. சிப்காட் பகுதியில் கட்டப்படும் மேம்பாலப் பணிகளை தீபாவளிக்குள் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவர அறிவுறுத்தப்பட்டுள்ளது. இப்பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்துள்ளது என்றாா்.

ஆய்வின்போது, மாநகராட்சி ஆணையா் முகமத் ஷபீா்ஆலம், சாா் ஆட்சியா் ஆக்ருதி சேத்தி, கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள் அக்ஷய் அனில் வாகாரே, சங்கா், தேசிய நெஞ்சாலைத் திட்ட அலுவலா் ரமேஷ் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் 5,061 சிவப்பு காது ஆமைகள் பறிமுதல்: பெண் பயணிகள் இருவா் கைது

காா் மோதி இளைஞா் உயிரிழப்பு

புகையிலைப் பொருள்கள் விற்பனை: 5 போ் கைது

வட்டமலை அணைப் பகுதியில் பெண் உடல் மீட்பு

கோவில்பட்டி அருகே தகராறு: 2 போ் கைது

SCROLL FOR NEXT