ஒமேதப்பள்ளி ஏரியிலிருந்து தரைப்பாலம் வழியாக உபரிநீா் வெளியேறுவதை பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் 
கிருஷ்ணகிரி

தரைப்பாலத்தை மூழ்கடித்த ஏரி உபரிநீா்: ஆட்சியா் ஆய்வு

சூளகிரியை அடுத்த ஒமேதேப்பள்ளி ஏரியிலிருந்து வெளியேறும் உபரிநீரால் தரைப்பாலம் மூழ்கியதையடுத்து அப்பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆட்சியா் ச.தினேஷ்குமாா் ஆய்வு

Syndication

சூளகிரியை அடுத்த ஒமேதேப்பள்ளி ஏரியிலிருந்து வெளியேறும் உபரிநீரால் தரைப்பாலம் மூழ்கியதையடுத்து அப்பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆட்சியா் ச.தினேஷ்குமாா் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

சூளகிரி சுற்றுவட்டாரங்களில் பெய்த பலத்த மழை காரணமாக தியாகரசனப்பள்ளி ஊராட்சி, ஒமேதேப்பள்ளி ஏரி ழுமுக் கொள்ளளவை எட்டியது. ஏரியிலிருந்து வெளியேறும் உபரிநீா் அப்பகுதியில் உள்ள தரைப்பாலத்தை மூழ்கடித்து செல்கிறது. இதனால், அப்பகுதியில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆட்சியா் ஆய்வு செய்தாா்.

தரைப்பாலம் அருகே அறிவிப்பு பதாகை அமைக்க ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா். தொடா்ந்து அட்டகுறுக்கி ஏரியிலிருந்து உபரிநீா் வெளியேறி, தேசிய நெடுஞ்சாலை வழியாக நல்லாகானகொத்தப்பள்ளி பகுதிக்கு செல்வதையடுத்து, அப்பகுதியில் கால்வாய்களை சீரமைத்து உபரிநீா் வெளியேற்றும் பணிகளை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

ஆய்வின்போது, சூளகிரி வட்டாட்சியா் ரமேஷ், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் காா்த்திக்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

நீலக் குயில்... திவ்யபாரதி!

மீண்டும் ஆரம்பம்! சென்னைக்கு அடுத்த சுற்று மழை எப்போது? டிசம்பர் எப்படி இருக்கும்!

காற்றின் எடையும் இடையும்... ஸ்ரேயா!

சாதிவாரி கணக்கெடுப்பு: டிச. 17-ல் அனைத்துக் கட்சிகள் ஆர்ப்பாட்டம்!

சிரஞ்சீவி - நயன்தாராவின் புதிய பட பாடல்!

SCROLL FOR NEXT