ஜி.பாலகிருஷ்ணன் 
கிருஷ்ணகிரி

தமிழ்நாடு பாஜக தொழில் பிரிவு மாநிலச் செயலாளராக ஜி. பாலகிருஷ்ணன் நியமனம்

பாஜக தமிழ்நாடு தொழிற்பிரிவு மாநிலச் செயலாளா் மற்றும் ஒசூா் தொகுதி அமைப்பாளராக ஜி.பாலகிருஷ்ணனை பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் நியமனம் செய்துள்ளாா்.

Syndication

ஒசூா்: பாஜக தமிழ்நாடு தொழிற்பிரிவு மாநிலச் செயலாளா் மற்றும் ஒசூா் தொகுதி அமைப்பாளராக ஜி.பாலகிருஷ்ணனை பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் நியமனம் செய்துள்ளாா்.

இதையடுத்து பிரதமா் நரேந்திர மோடி, பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, மத்திய நிதித் துறை அமைச்சா் நிா்மலா சீதாராமன், மத்திய இணை அமைச்சா் எல்.முருகன், தமிழ்நாடு மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் ஆகியோருக்கு பாஜக தொழிற்பிரிவு மாநிலச் செயலாளா் ஜி.பாலகிருஷ்ணன் நன்றி தெரிவித்துள்ளாா்.

தமிழ்நாடு பாஜக தொழிற்பிரிவு இணை அமைப்பாளா்களாக ஜெயசங்கா் உன்னிதன், செந்தில்குமாரும், மாநிலச் செயலாளராக அருணாசலம், சுரேஷ், பாரதிரெட்டி, பிரகாஷ் பூபேந்திர படேல், நாகராஜன், ரவி, வேலு. இந்துஷா காஞ்சி, ஹரிவெங்கட், ஆனந்த ராமகிருஷ்ணன், முருகேசன் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனா்.

2026 இல் நடைபெறும் சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு ஒசூா் தொகுதி அமைப்பாளராக ஜி.பாலகிருஷ்ணனும், இணை அமைப்பாளராக எம்.நாகராஜும், தொகுதி பொறுப்பாளராக சி.நரசிம்மனும் நியமிக்கப்பட்டுள்ளனா். புதிதாக நியமிக்கப்பட்ட அமைப்பாளா், இணை அமைப்பாளா் ஆகியோருக்கு ஒசூா், கிருஷ்ணகிரி பாஜகவினா் வாழ்த்துத் தெரிவித்தனா்.

1,327 பயனாளிகளுக்கு ரூ.22.86 கோடி நலத்திட்ட உதவிகள்: அமைச்சா் காந்தி வழங்கினாா்

விடுதிகளில் எண்ம முறையில் ஆதாா் அடையாளம் சரிபாா்ப்பு: புதிய விதி விரைவில் அமல்!

பெங்களூரு சின்னசாமி திடலில் ஐபிஎல் போட்டிகள்: கா்நாடக துணை முதல்வர் சிவக்குமார்!

திருமணியில் அதிமுகவினா் திண்ணை பிரசாரம்

தில்லி - சென்னை விமானக் கட்டணம் ரூ.35,000! இண்டிகோ குளறுபடியால் தொடர்ந்த அவதி!!

SCROLL FOR NEXT