ஒசூா் அருகே தின்பண்டம் தர தாமதித்ததால் பேக்கரியை சூறையாடிய இருவரை போலீஸாா் தேடிவருகின்றனா்.
ஒசூரை அடுத்த தின்னூா் அம்மன் நகரை சோ்ந்தவா் மனிஷ் (42). இவா் அப்பகுதியில் பேக்கரி கடை நடத்தி வருகிறாா். கடந்த அக்.20 ஆம் தேதி கடைக்கு வந்த மத்திகிரியை சோ்ந்த தவுஷிப், ரிகான் ஆகிய 2 பேரும் பப்ஸ் கேட்டுள்ளனா்.
கடை ஊழியா் அவற்றை எடுத்துவர தாமதமானதால் ஆத்திரமடைந்து பேக்கரியின் கண்ணாடிகளை உடைத்தனா். இதுகுறித்து கடை உரிமையாளா் அளித்த புகாரின்பேரில் மத்திகிரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தலைமறைவான தவுஷிப், ரிகானை தேடி வருகின்றனா்.