நாமக்கல்

நாமக்கல்லை பசுமையாக்கும் திட்டம் துவக்கம்: மரக்கன்று நாற்றுகள் தயாரிப்பு மையம் அமைப்பு

நாமக்கல்லை பசுமையாக்கும் திட்டத்தை, பசுமை நாமக்கல் இயக்கம் தொடங்கியுள்ளது. முதல் கட்டமாக தனியார் கல்வி நிறுவனங்கள் மூலம் மரக்கன்றுகளை நடும் பணி மேற்கொள்ளப்படவுள்ளது.

DIN

நாமக்கல்லை பசுமையாக்கும் திட்டத்தை, பசுமை நாமக்கல் இயக்கம் தொடங்கியுள்ளது. முதல் கட்டமாக தனியார் கல்வி நிறுவனங்கள் மூலம் மரக்கன்றுகளை நடும் பணி மேற்கொள்ளப்படவுள்ளது.
நாமக்கல் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு மற்றும் பசுமை நாமக்கல் அமைப்பு சார்பில் உலக சுற்றுச்சூழல் தின விழா நாமக்கல்லில் அண்மையில் நடைபெற்றது. விழாவுக்கு பசுமை நாமக்கல் அமைப்பின் தலைவர் வ. சத்தியமூர்த்தி தலைமை வகித்தார். செயலர் மா.தில்லை சிவக்குமார் வரவேற்றார்.
நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிபதி கே.எச்.இளவழகன், பசுமை நாமக்கல் அமைப்பு சார்பில் தொடங்கப்பட்டுள்ள மரக்கன்று நாற்றுகளை வளர்க்கும் நர்சரியில் மரக்கன்றுகளை நட்டார்.
மேலும் பள்ளி, கல்லூரிகளின் நிர்வாகிகளுக்கு மரக்கன்றுகளை வழங்கி நாமக்கல்லை பசுமையாக்கும் திட்டத்தைத் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பள்ளி, கல்லூரிகள், வணிக நிறுவனங்கள், தனியார் அமைப்புகள் தானாக முன்வந்து ஒரு பகுதியில் மரக்கன்றுகளை நட்டு, குறைந்தது இரண்டு ஆண்டுகளுக்குப் பராமரிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இந்தத் திட்டம் குறித்து பசுமை நாமக்கல் அமைப்பின் செயலர் மா.தில்லை சிவக்குமார் கூறியது,
காற்றில் அதிகரிக்கும் கார்பன்-டை ஆக்ஸைடு அளவைக் குறைக்க மரக்கன்றுகளை பெருமளவில் நட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதற்காக மோகனூர் சாலையில் பசுமை நாமக்கல் அமைப்பு மூலம் நர்சரி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இங்கு குறைந்த விலையில் மரக்கன்றுகள் விநியோகம் செய்யப்படுகிறது. முதல் கட்டமாக பள்ளி, கல்லூரிகளுக்கு மரக்கன்றுகளை வழங்கத் திட்டமிடப்பட்டு, சில கல்வி நிலையங்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டுள்ளன.
தொடர்ந்து வணிக நிறுவனங்கள், தன்னார்வலர்கள், கோழிப்பண்ணையாளர்கள், லாரி, ஹோட்டல் உரிமையாளர்கள் மூலம் நாமக்கல் நகரில் மரக்கன்றுகளை பெருமளவில் நடும் பணி ஒரு இயக்கமாக தொடர்ந்து நடைபெறும் என்றார்.
நிரந்தர மக்கள் நீதிமன்ற தலைவர் எம்.டி.சுமதி, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலர் எஸ்.அசின்பானு, பசுமை நாமக்கல் பொருளாளர் நா.சிவப்பிரகாசம், தனியார் கல்வி நிறுவனங்களின் நிர்வாகிகள் ரா.குழந்தைவேல், எஸ்.கே.வேல், சு.பழனியாண்டி, க.சிதம்பரம், ப.ராமச்சந்திரன், எ.அசோகன், கே.மோகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சொல்லப் போனால்... இண்டிகோவும் ஏகபோகங்களும்!

புகாரை திரும்பப் பெறுமாறு பெண்ணை மிரட்டியதாக ‘லவ் ஜிஹாத்’ குற்றவாளி மீது வழக்குப் பதிவு

பயணங்கள் வெற்றி இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

ஆசிய கனமழை: 1,750-ஐ கடந்த உயிரிழப்பு

கோவா இரவு விடுதியில் பயங்கர தீ விபத்து! 23 பேர் பலி!

SCROLL FOR NEXT