நாமக்கல்

ராசிபுரம் ஏரியில் மழை வேண்டி வருண யாகம்

மழை வேண்டி பொதுமக்கள், விவசாயிகள் சார்பில் ராசிபுரம் ஏரியில் வருண யாகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

DIN

மழை வேண்டி பொதுமக்கள், விவசாயிகள் சார்பில் ராசிபுரம் ஏரியில் வருண யாகம் வியாழக்கிழமை நடைபெற்றது.
பருவமழை தவறியதால் ராசிபுரம் சுற்றுவட்டாரப் பகுதியில் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதோடு குடிநீருக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மேலும் ராசிபுரம் ஏரிக்கு நீர் வரத்து பல ஆண்டுகளாக தடைப்பட்டுள்ளது. இதையடுத்து, முத்துக்காளிப்பட்டி பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள், விவசாயிகள் ஒன்றிணைந்து அங்குள்ள ஸ்ரீமாரியம்மன் கோயிலில் வழிபாடு நடத்தினர்.
பின்னர் பசுவுடன் மேளதாளம் முழங்க ஊர்வலமாக வந்து ராசிபுரம் ஏரியில் கோமாதா பூஜை, கணபதி பூஜை நடத்தினர். முன்னதாக அங்குள்ள ஏரிக்கு நீர்வரத்து கிடைக்க வேண்டும் என வலியுறுத்தி ஏரியின் அளவு கல்லுக்கு நீர் ஊற்றி கழுவி பூஜை செய்து வழிபட்டனர். பின்னர் சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க நீர் தேக்கிய பெரிய அண்டாவில் அமர்ந்து வழிபாடுகள் மேற்கொண்டனர். பின்னர் யாககுண்டம் வளர்த்து மழை வேண்டி வருண ஜபம் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாதிவாரி கணக்கெடுப்பு: டிச. 17-ல் அனைத்துக் கட்சிகள் ஆர்ப்பாட்டம்!

சிரஞ்சீவி - நயன்தாராவின் புதிய பட பாடல்!

அனுபமாவின் லாக் டவுன்: புதிய வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

கொல்லத்தில் தீ விபத்தில் 10 மீன்பிடி படகுகள் எரிந்து நாசம்

தவெகவுடன் கூட்டணியா? டிடிவி தினகரன் பதில்!

SCROLL FOR NEXT