நாமக்கல்

கட்டுப்பாட்டை இழந்த லாரி கிணற்றில் விழுந்து விபத்து: ஓட்டுநர் படுகாயம்

பரமத்தி வேலூர் காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் சரகத்துக்குள்பட்ட கீரம்பூர் அருகே புதன்கிழமை அதிகாலை ஓட்டுநரின்

தினமணி

பரமத்தி வேலூர் காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் சரகத்துக்குள்பட்ட கீரம்பூர் அருகே புதன்கிழமை அதிகாலை ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, தேசிய நெடுஞ்சாலையின் ஓரத்தில் இருந்த 30 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் லாரியின் ஓட்டுநர் படுகாயமடைந்தார்.
 நாமக்கல் அருகே உள்ள மங்கலபுரத்திலிருந்து, மதுரை காட்டூர் பகுதிக்கு பசை தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் மாவு மூட்டைகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று நாமக்கல்-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் புதன்கிழமை அதிகாலை சென்றது. கீரம்பூர் சுங்கச் சாவடி அருகே சென்ற போது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலை ஓரத்தில் இருந்த கிணற்றில் விழுந்தது. இதைப் பார்த்த அருகில் இருந்தவர்கள் லாரியின் ஓட்டுநரை காப்பாற்ற முயன்றனர். பின்னர் பரமத்தி காவல் துறையினருக்கும், நாமக்கல் தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் கிணற்றுக்குள் விழுந்த லாரி ஓட்டுநரான நாமக்கல் அக்கியம்பட்டியைச் சேர்ந்த சுப்பிரமணியை (55) மீட்டு நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து பரமத்தி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோவாவில் இரவு விடுதி தீ விபத்து சம்பவம்: அமித் ஷா இரங்கல்

அறவழியில் செயல்பட வேண்டும்

“விருச்சிகம் ராசி நேயர்களே!" இந்த வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

சூர்யா 47 பூஜையுடன் துவங்கிய படப்பிடிப்பு - புகைப்படங்கள்

கண்ணாமுச்சி ஏனடா? சினேகா!

SCROLL FOR NEXT