நாமக்கல்

பறந்து சென்றபோது மின்கம்பியில் மோதியதில் ஆண் மயில் பலி

குமாரபாளையம் அருகே வானில் பறந்து சென்றபோது மின்கம்பியில் மோதியதில் காயமடைந்த ஆண் மயில் புதன்கிழமை உயிரிழந்தது.

தினமணி

குமாரபாளையம் அருகே வானில் பறந்து சென்றபோது மின்கம்பியில் மோதியதில் காயமடைந்த ஆண் மயில் புதன்கிழமை உயிரிழந்தது.
 குமாரபாளையத்தை அடுத்த எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் அதிகளவில் மயில்கள் சுற்றித் திரிவது வழக்கம். இந்நிலையில், அப்பகுதியில் புதன்கிழமை காலை வானில் பறந்தபோது எதிர்பாராமல் மின்கம்பியில் மோதியதில் ஆண் மயில் ஒன்று பலத்த காயமடைந்து கீழே விழுந்தது. இதைக் கண்ட அப்பகுதி மக்கள் குமாரபாளையம் போலீஸாருக்கும், நாமக்கல் மாவட்ட வனத் துறை அலுவலர்களுக்கும் தகவல் அளித்தனர்.
 இதைத் தொடர்ந்து, காயமடைந்த மயிலுக்கு சிகிச்சை அளிக்க குப்பாண்டபாளையத்தில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. ஆனால், செல்லும் வழியிலேயே மயில் பரிதாபமாக உயிரிழந்தது. இதையடுத்து, வனத் துறை அலுவலர்களிடம் மயில் ஒப்படைக்கப்பட்டது.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

என்றும் இளமை... நதியா!

ராகுல் தகுதியற்றவர் என்பது இந்தியா கூட்டணித் தலைவர்கள் கருத்து: பாஜக

புதின் வருகையையொட்டி இப்படியெல்லாம் செய்வீர்களா? ரஷிய பத்திரிகையாளர்கள் அதிருப்தி!

ஸ்வயம் தோ்வுகளுக்கான மையங்களை சொந்த மாநிலத்திலேயே ஒதுக்க வேண்டும்: மத்திய அரசுக்கு வில்சன் எம்.பி. கடிதம்

சர்வதேச கிரிக்கெட்டில் 20000 ரன்களைக் கடந்த ரோஹித் சர்மா!

SCROLL FOR NEXT