பெண்களின் முன்னேற்றத்துக்காக சிறந்த சேவை புரிந்தோர் மற்றும் சிறந்த சமூக சேவை நிறுவனங்களுக்கு வழங்கப்படும் சுதந்திர தின விருதுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் வெளியிட்ட செய்தி: 2017-ஆம் ஆண்டில் சிறந்த சேவை புரிந்தோர் மற்றும் சிறந்த சமூக சேவை நிறுவனங்களுக்கு சுதந்திர தின விழாவில் பெண்கள் முன்னேற்றத்துக்கு சிறந்த சேவை புரிந்த ஒருவருக்கும், நிறுவனம் ஒன்றுக்கும் மாநில அளவில் விருது தமிழக முதல்வரால் வழங்கப்படவுள்ளது.
பெண்கள் முன்னேற்றத்துக்காக சிறந்த சேவை புரிந்த நபர்கள் மற்றும் நிறுவனத்தினர் உரிய கருத்துருக்களை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வரும் 20-ஆம் தேதிக்குள் மாவட்ட சமூக நல அலுவலர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், நாமக்கல் என்ற முகவரிக்கு அனுப்பிவைக்கலாம். மேலும் விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலர் அறை எண் 19, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், நாமக்கல் என்ற முகவரியில் நேரிலோ அல்லது 04286-280230 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.