நாமக்கல்

மு.க.ஸ்டாலின் கைது: மறியலில் ஈடுபட்ட திமுகவினர் கைது

சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, நாமக்கல்லில் சாலை மறியலில் ஈடுபட்ட 40 பேரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.

தினமணி

சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, நாமக்கல்லில் சாலை மறியலில் ஈடுபட்ட 40 பேரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
 நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் மாவட்டப் பொறுப்பாளர் பார்.இளங்கோவன் தலைமையில் அண்ணா சிலையில் இருந்து ஊர்வலமாக சென்று மணிக்கூண்டு அருகில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
 இதில் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து முழக்கம் எழுப்பினர். சாலை மறியலில் மாநில நிர்வாகிகள் ப.ராணி, நக்கீரன், நகரப் பொறுப்பாளர் சி.மணிமாறன், ஒன்றியச் செயலர் பாலு, கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மாவட்ட அமைப்பாளர் ஆனந்தன், துணை அமைப்பாளர் மார்டின் கிறிஸ்டோபர், பொறுப்புக்குழு உறுப்பினர்கள் பூபதி, ரவிச்சந்திரன், ஈஸ்வரன், அன்பரசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 8 பெண்கள் உள்ளிட்ட 40 பேரை போலீஸார் கைது செய்து, மாலையில் விடுவித்தனர்.
 குமாரபாளையத்தில்...
 பள்ளிபாளையம் பிரிவு சாலையில் திமுக நகரச் செயலர் கோ.வெங்கடேசன் தலைமையில் சாலை மறியல் நடைபெற்றது.
 இதில், ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்தும், அதிமுக அரசை எதிர்த்தும் திமுகவினர் முழக்கம் எழுப்பினர்.
 தலைமை சொத்துப் பாதுகாப்புக் குழு உறுப்பினர் ஜேகேஎஸ்.மாணிக்கம், மாவட்ட துணைச் செயலர் எஸ்.சேகர், நிர்வாகிகள் ரவி, அன்பரசு, ஆனந்தன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். மறியலில் ஈடுபட்டோர் கைது செய்யப்பட்டு பின்னர் மாலையில் விடுதலை செய்யப்பட்டனர்.
 பரமத்தி வேலூரில்...
 வேலூர், பரமத்தி, பொத்தனூர், பாலப்பட்டி, பாண்டமங்கலம், வேலகவுண்டம்பட்டி மற்றும் கபிலர்மலையில் ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்ட 200-க்கும் மேற்பட்ட திமுகவினரை போலீஸார் கைது செய்து பின்னர் விடுவித்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வழித்துணையே... யுக்தி சிங்!

3 வடிவ போட்டிகளிலும் சதம்: சாதனைப் பட்டியலில் இணைந்த ஜெய்ஸ்வால்!

இந்த வாரம் கலாரசிகன் - 07-12-2025

மன்னாா்குடி அருகே அரசு, தனியார் பேருந்துகள் மோதி விபத்து: 12 போ் காயம்

அறிவறிந்த மக்கட்பேற்றின் மாண்பு!

SCROLL FOR NEXT