நாமக்கல்

சந்தன மரக் கட்டைகள் கடத்தியவர் கைது

ராசிபுரம் அருகே மல்லூர் காட்டிலிருந்து சந்தன மரக் கட்டைகள் கடத்தியதாக திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவரை வனத் துறையினர் கைது செய்தனர்.

தினமணி

ராசிபுரம் அருகே மல்லூர் காட்டிலிருந்து சந்தன மரக் கட்டைகள் கடத்தியதாக திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவரை வனத் துறையினர் கைது செய்தனர்.
 ராசிபுரம் வன அலுவலர் தங்கராஜூ, வனவர் என்.சேகர் ஆகியோர் மல்லூர் காப்புகாடு பகுதியில் ரோந்து மேற்கொண்டனர். அப்போது, சந்தேகமான முறையில் ஒருவர் சாக்குப்பைகள் எடுத்துச் சென்றார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் திருவண்ணாமலை செங்கத்தைச் சேர்ந்த திருப்பதி (24) என்பதும், அவர் வைத்திருந்த பையில் ரூ.60 ஆயிரம் மதிப்புள்ள 22 கிலோ எடையுள்ள சந்தன மரக் கட்டைகள் கடத்திச் செல்வதும் தெரிய வந்தது.
 இதையடுத்து, அவரைக் கைது செய்த வனத் துறையினர் ராசிபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

என்றும் இளமை... நதியா!

ராகுல் தகுதியற்றவர் என்பது இந்தியா கூட்டணித் தலைவர்கள் கருத்து: பாஜக

புதின் வருகையையொட்டி இப்படியெல்லாம் செய்வீர்களா? ரஷிய பத்திரிகையாளர்கள் அதிருப்தி!

ஸ்வயம் தோ்வுகளுக்கான மையங்களை சொந்த மாநிலத்திலேயே ஒதுக்க வேண்டும்: மத்திய அரசுக்கு வில்சன் எம்.பி. கடிதம்

சர்வதேச கிரிக்கெட்டில் 20000 ரன்களைக் கடந்த ரோஹித் சர்மா!

SCROLL FOR NEXT