நாமக்கல்

மாற்றுத் திறன் குழந்தைகள் கணக்கெடுக்கும் பணி தொடக்கம்

மாற்றுத் திறன், பள்ளிச் செல்லாத குழந்தைகள் குறித்த கணக்கெடுக்கும் பணி கபிலர் மலை வட்டார வள மையம் சார்பில் மேற்கொள்ளப்பட்டது.

தினமணி

மாற்றுத் திறன், பள்ளிச் செல்லாத குழந்தைகள் குறித்த கணக்கெடுக்கும் பணி கபிலர் மலை வட்டார வள மையம் சார்பில் மேற்கொள்ளப்பட்டது.
 கபிலர் மலையில் பள்ளி செல்லா 6 முதல் 14 வயதுள்ள மாணவர்கள், 18 வயது வரையுள்ள மாற்றுத் திறன் கொண்ட மாணவர்கள் குறித்த கணக்கெடுக்கும் பணி கடந்த மாதம் 10-ஆம் தேதி தொடங்கியது.
 வட்டார வள மைய மேற்பார்வையாளர், உதவித் தொடக்கக் கல்வி அலுவலர், அங்கன்வாடி ஒருங்கிணைப்பாளர், ஆரம்ப சுகாதார ஆய்வாளர்,தலைமை ஆசிரியர்கள் ஆகியோர் மூலம் இப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
 கபிலர்மலை ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட 172 குடியிருப்புப் பகுதிகள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது. இதில் 21 பள்ளி செல்லா குழந்தைகளும், நான்கு மாற்றுத் திறன் குழந்தைகளும் கண்டறியப்பட்டுள்ளது.
 இவர்களை உண்டு உறைவிடப் பள்ளி, சிறப்பு பயிற்சி மையத்தில் சேர்க்க ஆசிரியர்கள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தொல்லியல் துறை போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு

கோவா இரவு விடுதி விபத்து எதிரொலி: பாதுகாப்பு அம்சங்களை ஆய்வு செய்யும் தில்லி போலீஸ்!

வளா்ந்த பாரதம் இலக்கை அடைய இளைஞா்கள் பங்களிக்க வேண்டும்: விண்வெளி வீரா் சுக்லா வலியுறுத்தல்!

இலவச கண் மருத்துவ முகாம்: 200 பேருக்கு சிகிச்சை

வீடு கட்ட பள்ளம் தோண்டிய போது வெண்கல முருகா் சிலை கண்டெடுப்பு!

SCROLL FOR NEXT