நாமக்கல்

கிராம கல்விக்குழு கணக்காளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

கிராம கல்விக்குழு கணக்காளர் பணிக்கு தாற்காலிக அடிப்படையில் பணியாற்ற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி

கிராம கல்விக்குழு கணக்காளர் பணிக்கு தாற்காலிக அடிப்படையில் பணியாற்ற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் வெளியிட்ட செய்தி: அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம் கிராம கல்விக்குழு கணக்காளர் பணிக்கு தகுதியான பணியாளர் நியமிக்கப்பட உள்ளனர். இப்பணிக்கு இளநிலை வணிகவியல் பட்டப்படிப்புடன் டேலி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். 35 வயதுக்கு மிகாமலிருக்க வேண்டும்.
 பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, நாமக்கல் மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்க கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில், வரும் 31-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு, வட்டார வள மையம் மூலம் நிலையான பயணப்படி உள்பட மாதம் ரூ.9,900 மட்டும் தொகுப்பூதியமாக வழங்கப்படும். இதற்கான விண்ணப்பப் படிவம் அனைவருக்கும் கல்வி இயக்க, மாவட்ட திட்ட அலுவலகத்தில் உள்ள தகவல் பலகையில் ஒட்டப்பட்டுள்ளது. விண்ணப்பித்தவர்களில் தகுதியானவர்களுக்கு மட்டுமே எழுத்துத் தேர்வுக்கு அழைப்புக் கடிதம் தகவல் பலகை மூலமாக தெரிவிக்கப்படும்.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தாணே: போலி பாஸில் உள்ளூர் ரயிலில் பயணம் செய்த இளைஞர் கைது

பூவே உனக்காக... மோனிஷா மோகன்!

சென்னை: ஜிஎஸ்டி ஆணையரக அலுவலகத்தில் தீவிபத்து! முக்கிய ஆவணங்கள் எரிந்து நாசம்!

வீரமங்கை வேலுநாச்சியார் மேம்பாலம்! முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்!

அடுத்த படத்தின் படப்பிடிப்பை முடித்த மஞ்ஞுமெல் பாய்ஸ் இயக்குநர்!

SCROLL FOR NEXT