நாமக்கல்

காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்

DIN

காமராஜரின் 117-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில், நாமக்கல் பேருந்து நிலையம் எதிரில் உள்ள காமராஜர் சிலைக்கு கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
 மாவட்டத் தலைவர் கே.எம்.ஷேக்நவீத் தலைமையில் நடைபெற்ற விழாவில், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து, பாச்சல், வெண்ணந்தூர் உள்ளிட்ட பகுதிகளிலும் கட்சி சார்பில் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
 சேந்தமங்கலம் வட்டம் இராமநாதபுரம்புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் காமராஜர் உருவப் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து, மாணவ, மாணவியருக்கு நோட்டு, பேனா, பென்சில், இனிப்பு வழங்கப்பட்டன.
 பரமத்தி வேலூரில்...
 பரமத்தி வேலூர் வட்டம், நல்லூர் கந்தம்பாளையம் எஸ்.கே.வி. பள்ளியில் காமராஜர் கல்வி வளர்ச்சி நாள் விழா கொண்டாடப்பட்டது. பரமத்தி மலர் பப்ளிக் பள்ளியில் பள்ளியின் தலைவர் பழனியப்பன், செயலர் கந்தசாமி மற்றும் பொருளாளர் வெங்கடாசலம் ஆகியோர் காமராஜர் திருஉருவப் படத்துக்கு மாலை அணிவித்து மலர்கள் தூவி மரியாதை செலுத்தினர். கபிலர்மலை அரசினர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் மாணவ, மணவியருக்கு காமராஜர் வாழ்க்கை வரலாறு குறித்த கட்டுரைப் போட்டி, பேச்சுப் போட்டி நடைபெற்றது.
 காங்கிரஸ் கட்சி சார்பில் கொண்டாடப்பட்ட விழாவுக்கு மாநில பொதுக்குழு உறுப்பினர் பரமசிவம் தலைமை தாங்கினார். சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாரிசுகளான அவினாசிலிங்கம், பழனிவேல் ஆகியோர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
 ராசிபுரத்தில்...
 ராசிபுரம் நகர காங்கிரஸ் கமிட்டி, காந்தி மாளிகை டிரஸ்ட் போர்டு சார்பில் காமராஜரின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து, இனிப்புகள் வழங்கப்பட்டன. தியாகி பச்சமுத்து உடையார் கொடியேற்றினார். வடுகம் முனியப்பம்பாளையம் கிராம காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் பிரிவு பொதுச் செயலர் சி.சௌந்திரராஜன் தலைமை வகித்து காமராஜர் திருஉருவப் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதே போல் ஆர்.புதுப்பாளையம் கிராம காங்கிரஸ் கமிட்டி சார்பில் காமராஜரின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.
 சிங்களாந்தபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், காமராஜர் பிறந்த தினவிழா கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது. ஆர்.புதுப்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில், ராசிபுரம் ரோட்டரி சங்கத்துடன் இணைந்து கொண்டாடப்பட்டது. ராசிபுரம் மகரிஷி வித்யா மந்திர் பள்ளியில், பள்ளியின் தலைவர் க. சிதம்பரம் காமராஜர் கொண்டு வந்த மதிய உணவு திட்டம் குறித்தும், அவரது ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட நீர்த்தேக்கங்கள் குறித்தும், கல்வி வளர்ச்சி குறித்தும் கூறினார்.
 ராசிபுரம் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் தலைமையாசிரியர் கு.பாரதி தலைமை வகித்தார். ஆர்.புதுப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, ஓவியப் போட்டி, திருக்குறள் ஒப்புவித்தல், ஆத்திச்சூடி ஒப்புவித்தல், பழமொழி ஒப்புவித்தல் போன்ற போட்டிகள் நடைபெற்றன. சேந்தமங்கலம் முதியோர் இல்லத்தில், தேசிய மக்கள் சக்தி கட்சியின் சார்பில் முதியோர்கள் அனைவருக்கும் இனிப்பு, காலை உணவு வழங்கப்பட்டது.
 விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் வெண்ணந்தூர் பகுதியில் காமராஜர் திருஉருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நாடார் அறக்கட்டளை சார்பில் ராசிபுரம் பழைய பேருந்து நிலையம் முன் காமராஜர் திருஉருவப் படத்துக்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கினர்.
 திருச்செங்கோட்டில்...
 நாமக்கல் மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் தனகோபால் தலைமை வகித்து புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்தார்.
 ராஜாகவுண்டபாளையம் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் குழந்தைகளுக்கு இனிப்பு மற்றும் எழுதுப் பொருள்கள் வழங்கப்பட்டன.
 தேடல் தன்னார்வ தொண்டு அமைப்பினர் சார்பில் கொல்லபட்டி நகராட்சிப் பள்ளி மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகங்கள், இனிப்புகள் வழங்கப்பட்டன. சித்தளந்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியர் சாந்தி காமராஜரின் உருவப் படத்துக்கு மாணவர்களுடன் மலர்தூவி மரியாதை செய்தார். திருச்செங்கோடு சட்டையம்புதூர், நெசவாளர் காலனி, சூரியம்பாளையம், பாவடித் தெரு போன்ற நகராட்சிப் பள்ளிகளில் காமராஜரின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
 குமாரபாளையத்தில்...
 குமாரபாளையம் நகராட்சி மேற்கு காலனி நடுநிலைப் பள்ளியில் காமராஜரின் வாழ்க்கை குறித்து மாணவ, மாணவியருக்கு பேச்சு, ஓவியம், கட்டுரை மற்றும் கவிதைப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.
 வேமன்காட்டுவலசு அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தலைமையாசிரியர் ம.கெளரி தலைமை வகித்தார். சின்னப்பநாயக்கன்பாளையம் நகராட்சி தொடக்கப் பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளியில் நேதாஜி கபடிக் குழுத் தலைவர் சுந்தர்ராஜன் தலைமையில் கல்வி வளர்ச்சி நாள் கொண்டாடப்பட்டது. குமாரபாளையம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற காவல் ஆய்வாளர் தேவி, பெண்களின் தன்னம்பிக்கை, தற்காப்பு நிலை, சமூக பிரச்னைகளை எதிர்கொள்தல் குறித்து பேசினார்.
 குமாரபாளையம் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் கட்சி அலுவலகத்தில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. குமாரபாளையம் அரசு மருத்துவமனை மகப்பேறு பிரிவுக்கு இரண்டு வாட்டர் ஹீட்டர்கள் வழங்கப்பட்டன.
 குமாரபாளையத்தை அடுத்த கல்லாங்காட்டுவலசில் காமராஜரின் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

மத்திய தோல் ஆராய்ச்சி மையத்தில் வேலை: 22 இல் நேர்முகத் தேர்வு

முதல் நபராக வாக்களித்த நடிகர் அஜித்!

போட்டியில் அனைவருமே எனது சகோதரர்கள்: செளமியா அன்புமணி

கீழ்வேளூா் அருகே ரூ.1 லட்சம் பறிமுதல்

SCROLL FOR NEXT