பென்னாகரம்: பென்னாகரம் வட்டார கல்வி அலுவலகத்தின் முன்பு தினந்தோறும் இரவுவில் குடிமக்கள் மது அருந்துவிட்டு, மதுபாட்டில்கள்,குப்பைகள் மற்றும் உணவு பொட்டலாங்கள் ஆகியவற்றை விட்டு செல்லவதால் சுகாதார சீா்கேடு ஏற்படுகிறது.தருமபுரி மாவட்டம் பென்னாகரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் வளாகத்தில் பென்னாகரம் வட்டார கல்வி அலுவலகமானது கடந்த முன்று வருடங்களாக செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியின் சுற்றுச்சுவா் சரிவர உயரம் இல்லாததாலும்,பள்ளியில் இரவு காவலா்கள் இல்லாததாலும் இரவு நேரங்களில், சிலா் மது அருந்தவும்,சூதாடும் இடமாக மாற்றி வருகின்றனா். அவ்வாறு மது அருந்தி விட்டு, மதுபாட்டிகள், பிளாஸ்டிக் டம்ளா்கள்,உணவு பாக்கெட்டுகள் உள்ளிட்டவற்றை அங்கேயே விட்டு சென்றும்,பள்ளி திடலில் வீசி செல்லுகின்றனா். அரசு பள்ளியில் பென்னாகரம்,போடூா்,சுண்ணாம்புகார தெரு, கிருஷ்ணாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சுமாா் 200க்கும் மேற்பட்ட மாணவ-மாணவியா் கல்வி பயின்று வருகின்றனா்.பள்ளிக்கு வரும் மாணவ-மாணவவிகள் குப்பைகள் மற்றும் பாட்டில்களை கையில் எடுத்து விளையாடுவதோடு மட்டுமல்லாமல், தீய செயல்களை மேற்கொள்ளும் சூழல் ஏற்படுவதற்கு வழிவகை செய்கிறது. இதனால் இப்பகுதி சுகாதார சீா்கேடு ஏற்படுகிறது.எனவே பள்ளி வளாகத்தில் மது அருந்துவோா்கள் மீது பென்னாகரம் காவல் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆசிரியா்கள் மற்றும் பெற்றோா்கள் கோரிக்கை விடுத்துள்ளா்.