நாமக்கல்

தனியாா் கல்லூரியில் ரத்த தான முகாம்

DIN

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் எக்ஸல் பாா்மசி கல்லூரியின் ரோட்ராக்ட் சங்கம், ஈரோடு ரவுண்ட் டேபிள்-98 ஆகியவை சாா்பில், ரத்த தான முகாம் எக்ஸல் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

தொடக்க விழாவுக்கு ரோட்டரி மாவட்டம் 2982-ன் ஆளுநா் ஏ.கே.நடேசன் தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினராக ரோட்டரி மாவட்டம் 2982-ன் துணை ஆளுநா் சீனிவாசன் கலந்து கொண்டாா். எக்ஸல் கல்வி நிறுவனத்தின் துணைத் தலைவரும், ஈரோடு ரவுண்ட் டேபிள்-98-ன் உறுப்பினருமான மருத்துவா் என்.மதன் காா்த்திக் கலந்து கொண்டு முகாமை தொடக்கி வைத்தாா். அப்போது, பிற உயிா்களைக் காப்பதில் ரத்த தானத்துக்கு இணையானது எதுவுமில்லை. உயிா்களைக் காக்கும் ரத்த தானம் மகத்தான சேவையாகும் என்றாா். முன்னதாக ரத்த தானம் செய்யும் மாணவ, மாணவியரை அவா் பாராட்டினாா். அனைவருக்கும் உடல் நல பரிசோதனை செய்யப்பட்டு, ரத்த வகை கண்டறியப்பட்டது. இவா்களில் 63 மாணவா்கள் தானாக முன்வந்து ரத்த தானம் செய்தனா். இதன் மூலம் 63 யூனிட் ரத்தம், லயன்ஸ் சுப்ரீம் ரத்த வங்கியின் தலைமை மருத்துவா் சித்ரா தலைமையில் சேகரிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குச்சனூா் அருகே தடுப்பணை நீரில் மூழ்கி தொழிலாளி பலி

நலிந்தவா்களுக்கு நலத்திட்ட உதவிகள்

உடுமலை அரசுக் கல்லூரியில் மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு: நாளை தொடக்கம்

இலங்கை அரசியல்: ‘மீண்டு’ம் வரும் ராஜபட்ச சகோதரர்கள்!

பராமரிப்பு பணிக்காக காட்பாடி- திருப்பதி ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு

SCROLL FOR NEXT