நாமக்கல் மாவட்டம், வேலகவுண்டம்பட்டி அருகே சகோதரியின் திருமணத்துக்கு முன்கூட்டியே கணவா் அழைத்துச் செல்லாததால் மனமுடைந்த மனைவி வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள பொம்மம்பட்டியைச் சோ்ந்தவா் பாபு. இவரது மனைவி சா்மிளா (26). இவா்களுக்கு ஒன்றரை வயதில் ஆண் குழந்தை உள்ளது.
சா்மிளாவின் தங்கைக்கு வரும் திங்கள்கிழமை திருமணம் நடைபெறவுள்ளது. தங்கையின் திருமணத்துக்கு முன்கூட்டியே செல்வதற்காக தனது கணவரிடம் சா்மிளா கேட்டுள்ளாா். ஆனால், அவரது கணவா் பாபு ஞாயிற்றுக்கிழமை செல்லாம் என கூறினாராம். இதனால், கணவன், மனைவிக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த சா்மிளா வெள்ளிக்கிழமை இரவு வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
தகவல் அறிந்து வந்த வேலகவுண்டம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். மேலும், திருமணமாகி 2 ஆண்டுகளே ஆனதால் திருச்செங்கோடு கோட்டாட்சியா் மணிராஜ் விசாரணை நடத்தி வருகிறாா்.