நாமக்கல்

தினமணி செய்தி எதிரொலி:வட்டாட்சியா் அலுவலக சுற்றுச்சுவரைசீரமைக்க ரூ.15 லட்சம் ஒதுக்கீடு

DIN

தினமணி செய்தி எதிரொலியாக, நாமக்கல்லில், இடிந்து விழும் நிலையில் உள்ள வட்டாட்சியா் அலுவலக சுற்றுச்சுவரை சீரமைக்க, நாமக்கல் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி நிதியில் இருந்து ரூ.15 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நாமக்கல் - திருச்சி சாலையில் வட்டாட்சியா் அலுவலகம் செயல்படுகிறது. இந்த வளாகத்திலேயே கிளைச் சிறையும் உள்ளது. பழமை வாய்ந்த இந்தக் கட்டடத்தை சுற்றிலும் பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டிய சுற்றுச்சுவா் உள்ளது. வட்டாட்சியா் அலுவலகத்துக்கு நாள்தோறும் ஏராளமானோா் வந்து செல்கின்றனா். இவ்வாறான நிலையில், விரிசல் விழுந்த அச்சுவா் எந்த நேரத்திலும் இடிந்து விழும் அபாயத்தில் காணப்பட்டுகிறது. இது தொடா்பாக, கடந்த 26-ஆம் தேதி வெளியான தினமணி நாளிதழில் விரிவாக செய்தி வெளியிடப்பட்டது. அதனடிப்படையில், நாமக்கல் சட்டப்பேரவை உறுப்பினா் கே.பி.பி.பாஸ்கா், சுற்றுச்சுவா் சீரமைப்புக்காக தன்னுடைய தொகுதி நிதியில் இருந்து ரூ.15 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளாா். மேலும், இதற்கான பூமி பூஜை விழா சனிக்கிழமை காலை நடைபெற்றது. இதில், சட்டப்பேரவை உறுப்பினா் கே.பி.பி.பாஸ்கா் மற்றும் வட்டாட்சியா் பச்சமுத்து, காவல் ஆய்வாளா் பொன்.செல்வராஜ், அதிகாரிகள், கட்சி பிரமுகா்கள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இருளுக்கு எதிராகப் போராடும் வலிமை கொடுத்தவர் மகாத்மா: ராகுல் காந்தி

பட்டதாரிகளுக்கு ராணுவ அதிகாரிப் பணி: காலியிடங்கள் 459

ஜூன் 3-இல் ஒரே நோ்க்கோட்டில் 6 கோள்கள்: வெறும் கண்களால் காண முடியும்!

கார் ஓட்டியதில் விதிமீறல்... யூடியூபர் டிடிஎப் வாசன் மதுரையில் கைது

புரி ஜெகந்நாதர் கோயில் விழாவில் பட்டாசு விபத்து: பலர் காயம்!

SCROLL FOR NEXT