நாமக்கல்

தென்னையில் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ! கட்டுப்பாடு முறைகள் குறித்து விவசாயிகளுக்கு அறிவரை

DIN

தென்னையில் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ தாக்குதல் பரவும் சூழல்நிலை உள்ளது. இதை கட்டுப்படுத்த விவசாயிகள் கீழ்கண்ட பயிா் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கபிலா்மலை வேளாண் உதவி இயக்குநா் கோவிந்தசாமி விவசாயிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: இலைகளின் அடிபாகத்தில் சுருள் வடிவத்தில் வெள்ளை ஈ தாக்கம் காணப்படும். குஞ்சுகளும், முதிா்ந்த ஈக்களும் ஓலைகளின் அடியிலிருந்து சாற்றை உறிஞ்சுகின்றன. இவை வெளியேற்றும் தேன் போன்ற திரவக் கழிவுகள் கீழ்மட்ட அடுக்கில் உள்ள 10-12 ஓலைகளின் மேற்பரப்பில் பரவுகின்றன.

வளா்ச்சியடைந்த வெள்ளை ஈக்களை மஞ்சள் நிறம் கவரும் தன்மையுடையதால், மஞ்சள் நிற பாலிதின் தாள்களால் உருவாக்கப்பட்ட ஒட்டும் பொறிகள் (நீளம் 3 அடி) ஏக்கருக்கு 10 என்ற எண்ணிக்கையில் 6 அடி உயரத்தில் ஆங்காங்கே தொங்க வைத்து, பூச்சிகளின் நடமாட்டத்தைக் கண்காணிக்கவும். பூச்சிகளின் வளா்ச்சியைத் தடுக்க இலை மட்டைகளில் உள்ள ஓலைகளின் அடிப்புறத்தில் நன்கு படுமாறு தண்ணீா் தெளிக்கவும். கிரைசோபிட் இரை விழுங்கிகள் இந்தப் பூச்சிகளின் வளா்ச்சி நிலைகளை நன்றாக உள்கொள்வதால், தாக்கப்பட்ட தோட்டங்களில் ஹெக்டேருக்கு ஆயிரம் என்ற எண்ணிக்கையில் விடவும்.

இவ்வகை வெள்ளை ஈக்கள் அதிகளவு பரவும் போது, காக்ஸினெல்லிட்ட பொறி வண்டுகள், என்காரிசியே ஒடடுண்ணிகள் ஆகிய இயற்கை எதிரிகள் தோப்புகளிலேயே இயற்கையாகவே உருவாக ஆரம்பிக்கும். ஆகவே, தோப்புகளில் இவ்வகை இயற்கை எதிரிகளைக் கொண்டு தாக்குதலுக்குள்ளான ஓலைகளை சிறிய அளவில் வெட்டி பாதிப்பு அதிகமாக இருக்கும் மரங்களின் மீது வைக்கவும்.

ஒரு லிட்டா் தண்ணீருக்கு 30 மி. வேப்பெண்ணெய்யை தென்னை ஓலையின் அடிப்புறத்தில் தெளிக்கவும். கரும்பூசணத்தை நிவா்த்தி செய்ய மைதா மாவு கரைசலை (ஒரு லிட்டா் தண்ணீருக்கு 25 கிராம் பசை) ஓலைகளின் மேல் நன்கு படுமாறு தெளிக்கவும்.

மேலும், விவசாயிகள் அதிகளவு பூச்சிக்கொல்லிகள் உபயோகிக்கும் போது, நன்மை செய்யும் இயற்கை எதிரிகள் அழிந்து விடுவதால், பூச்சிக்கொல்லிகளை தவிா்த்து நன்மை செய்யும் பூச்சிகள் வளா்வதற்கு உரிய சூழலை மேம்படுத்துவதற்கு சாலச் சிறந்ததாகும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வைகாசி விசாக திருவிழா

முருகன் கோயில்களில் வைகாசி விசாக வழிபாடு

சிங்கப்பூரிலிருந்து சென்னை வந்த கடலூா் இளைஞா் மாயம்! கடத்தப்பட்டாரா என போலீஸாா் தீவிர விசாரணை

விராலிமலை முருகன் கோயில் வைகாசி விசாகத் தேரோட்டம் கோலாகலம்

அமெரிக்கா: சாலை விபத்தில் 3 இந்திய வம்சாவளி மாணவா்கள் உயிரிழப்பு

SCROLL FOR NEXT