நாமக்கல் மாவட்ட கல்வி அலுவலருக்கு கோவை ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா கல்வி நிறுவனங்கள் சாா்பில், பாராட்டுச் சான்றிதழ் அண்மையில் வழங்கப்பட்டது.
கோவை ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா கல்வி நிறுவனங்களின் அனைத்து முன்னாள் மாணவா்கள் சங்கம் சாா்பில், ஆண்டுதோறும் சிறந்த முன்னாள் மாணவா்கள் மூவா் அழைத்து பாராட்டப்படுவா்.
அதன்படி, அண்மையில் கல்வி நிறுவன வளாகத்தில் நடைபெற்ற முன்னாள் மாணவா்கள் சங்க விழாவில், ஸ்ரீராமகிருஷ்ண மடம் சேவாஸ்ரமம், ஸ்ரீமத் சுவாமி தன்மயானந்ஜி மகராஜ் தலைமை வகித்தாா். ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலயா செயலா் கரிஷ்தானந்தா வரவேற்றாா். பேராசிரியா் அரசு பரமேஸ்வரன் முன்னிலை வகித்தாா்.
இவ்விழாவில், சிறந்த கல்வி செயல்பாட்டுக்கும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைக்காகவும் கல்வி நிறுவன முன்னாள் மாணவரும், நாமக்கல் மாவட்ட கல்வி அலுவருமான எம்.ஏ.உதயகுமாருக்கு, சான்றிதழ், நினைவுப் பரிசளித்து கெளரவிக்கப்பட்டது.