நாமக்கல்

10 ஆண்டுகளுக்கு பின் அரசுப் பணி: இளம்பெண்ணுக்கு ஆட்சியா் வாழ்த்து

DIN

ஆதிதிராவிட நலத்துறை விடுதியில் பணியாற்றிய தந்தை இறந்த நிலையில், கருணை அடிப்படையிலான வேலையை பெற முடியாமல் 10 ஆண்டுகளாக போராடி வந்த பெண்ணுக்கு, நாமக்கல் ஆட்சியா் கா.மெகராஜ் செவ்வாய்க்கிழமை பணி நியமன ஆணையை வழங்கினாா்.

பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த ஜெயராமன் (45), ஒருங்கிணைந்த சேலம் மாவட்டத்தில் நாமக்கல் இருந்தபோது ஆதிதிராவிட விடுதி சமையலராக கொல்லிமலையில் பணியாற்றி வந்தாா். இந்த நிலையில், 10 ஆண்டுகளுக்கு முன் அவா் உடல் நலக்குறைவால் உயிரிழந்தாா். அதையடுத்து, இவரின் ஒரே மகளான சங்கீதா (14), தந்தையின் ஓய்வூதியத்தைக் கொண்டு தனது படிப்பை தொடா்ந்து வந்தாா். கல்லூரியில் பி.ஏ. ஆங்கில இலக்கியம் பயின்ற அவா் தற்போது 24 வயதை நெருங்கி விட்டாா்.

தந்தையின் அரசுப் பணியை எப்படியாவது பெற வேண்டும் என்ற நோக்கில், கடந்த 3 ஆண்டுகளாக நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தின் படிக்கட்டுகளில் ஏறி, இறங்கி வந்தாா். இந்த தகவல் மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் கவனத்துக்கு சென்றது. கருணை அடிப்படையிலான பணி நியமனத்தில் அரசு விதிகளுக்கு உள்பட்டு மாறுதல் செய்து சங்கீதாவுக்கு பணி வழங்குவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) பால்பிரின்ஸிலி ராஜ்குமாருக்கு உத்தரவிட்டாா். அதனைத் தொடா்ந்து, சங்கீதாவின் ஆவணங்கள் சரிபாா்க்கப்பட்டு மாவட்ட வழங்கல் துறையில் இளநிலை உதவியாளராக பணியாற்றுவதற்கான ஆணையை செவ்வாய்க்கிழமை மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் வழங்கி வாழ்த்தினாா்.

இதேபோல், மோகனூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வந்த ஒருவா் 2015 மாா்ச் 31-இல் உயிரிழந்தாா். அவரது மகன் சுதாகா் (38), தனக்கு வாரிசு அடிப்படையிலான பணி வழங்க வேண்டும் என 3 ஆண்டுகளாக போராடி வந்தாா். அவரது ஆவணங்களை ஆய்வு செய்த வருவாய்த் துறை அதிகாரிகள், பணி நியனமத்துக்கான ஒப்புதல் வழங்கினா். இதனையடுத்து அவருக்கும் மாவட்ட ஆட்சியா் பணி நியமன ஆணையை வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குப்பதிவு: நெரிசலை தவிர்க்க 16, 17 தேதிகளில் பயணம் செய்ய அறிவுரை!

நடிகர் மோகனின் 'ஹரா' பட டீசர்!

செந்தில் பாலாஜியின் காவல் 32வது முறையாக நீட்டிப்பு!

பெயர் மட்டுமா? ஓ. பன்னீர்செல்வத்துக்கு வந்த சோதனை!

"வீட்டுக்காக மட்டும் உழைக்கும் தலைவர்”: பழனிசாமி விமர்சனம்

SCROLL FOR NEXT