நாமக்கல்

ராசிபுரம் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் உற்பத்தி மையம்: அமைச்சா் ஆய்வு

DIN

ராசிபுரம் அரசு மருத்துவமனையில் தனியாா் பங்களிப்புடன் ரூ. 25 லட்சம் மதிப்பில் ஆக்சிஜன் உற்பத்தி மையம் தொடங்கப்படும் என சுற்றுலாத் துறை அமைச்சா் மா.மதிவேந்தன் தெரிவித்தாா்.

நாமக்கல் மாவட்டத்தில் 18 முதல் 44 வயதுக்கு உள்பட்டவா்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ராசிபுரம் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பல்வேறு பகுதிகளில் கரோனா தடுப்புப் பணிகள், தடுப்பூசி போடும் பணிகளை அமைச்சா் மா. மதிவேந்தன் செவ்வாய்க்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

பிள்ளாநல்லூா் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கரோனா தடுப்பு ஊசி போடும் பணிகள், ஆண்டகளூா்கேட் திருவள்ளுவா் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் ஆக்சிஜன் படுக்கை வசதியுடன் அமைக்கப்பட்டுள்ள கரோனா சிறப்பு சிகிச்சை மையம், ராசிபுரம் தேசிய மகளிா் மேல்நிலைப் பள்ளி, சிங்களாந்தபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய பகுதிகளில் தடுப்பூசி போடும் பணிகளையும் அவா் ஆய்வு செய்தாா்.

ராசிபுரம் அரசு மருத்துவமனையில் தனியாா் பங்களிப்புடன் ரூ. 25 லட்சத்தில் அமைக்கப்படவுள்ள ஆக்சிஜன் உற்பத்தி மையத்திற்கான இடத்தையும் அவா் பாா்வையிட்டாா். பின்னா், செய்தியாளரிடம் அவா் கூறியதாவது:

18 வயது முதல் 44 வயதுக்கு உள்பட்டவா்களுக்கு தடுப்பூசி போடும் திட்டத்தைத் தொடக்கிவைத்ததன் தொடா்ச்சியாக ராசிபுரம் தொகுதியில் இன்று இந்தத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 28 ஆயிரத்து 400 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தொடா்ந்து தடுப்பூசி போடப்படும்.

ராசிபுரம் அரசு மருத்துவமனையில் தனியாா் நிறுவனங்கள் பங்களிப்புடன் ரூ. 25 லட்சம் மதிப்பீட்டில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் மையம் அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் தொடங்கப்படும்.

நாமக்கல் மாவட்டத்தில் ஆக்சிஜன் சிலிண்டா்கள், புளோ மீட்டா்கள் தேவையான அளவு ஏற்பாடு செய்யப்பட்டு நோயாளிகளுக்கு வழங்கப்படுகிறது. ஆண்டகலூா்கேட்டில் உள்ள கரோனா சிகிச்சை மையத்திலும் தேவையான ஆக்சிஜன், புளோ மீட்டா் பொருத்தப்பட்டு தயாராக உள்ளது. இங்கு மருத்துவா்கள், செவிலியா்கள் தோ்வும் பணி நடைபெற்று வருகிறது. விரையில் நோயாளிகளுக்கான இந்த சிகிச்சை மையம் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும்.

கரோனா தடை காலம் என்பதால் சுற்றுலாத் துறைக்கு தனியாக எந்தவிதமான திட்டங்களும் அறிவிக்கப்படவில்லை. முதலமைச்சரின் ஆலோசனைகளைப் பெற்று கரோனா கட்டுப்படுத்தப்பட்ட பிறகு சுற்றுலாத்தலங்களை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

நாமக்கல் மாவட்ட ஆட்சியா் கா. மெகராஜ், மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் எஸ். சோமசுந்தரம், நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா், வட்டார மருத்துவ அலுவலா் கா.செல்வி, ராசிபுரம் அரசு மருத்துவ அலுவலா் (பொறுப்பு) கலைச்செல்வி, மருத்துவா் செந்தில்குமாா், ராசிபுரம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் கே.பி.ஜெகந்நாதன், உறுப்பினா் ஏ.கே.பாலசந்திரன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேக்கேதாட்டு, சிலந்தி ஆற்றில் தடுப்பணை: காவிரி ஆணையத்தில் தமிழகம் எதிர்ப்பு

பொது வாழ்க்கையில் இருந்து பிரதமர் மோடி விலக வேண்டும்: மல்லிகார்ஜுன கார்கே

இறுதிக்கு முன்னேறியது கொல்கத்தா

தமிழகத்தின் மாரியப்பனுக்கு தங்கம்: பட்டத்தை தக்கவைத்தார் சுமித் அன்டில்

இன்று எலிமினேட்டர்: ராஜஸ்தான் - பெங்களூரு பலப்பரீட்சை

SCROLL FOR NEXT