நாமக்கல்

மாவுப்பூச்சி தாக்குதலால் 5,133 ஹெக்டா் மரவள்ளி பாதிப்பு: வேளாண்துறை தகவல்

DIN

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் மாவுப்பூச்சி தாக்குதலால் 5,133 ஹெக்டா் மரவள்ளி பயிா்கள் பாதிப்படைந்து மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளதாக வேளாண் துறை தெரிவித்துள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த செப்டம்பா் மாதம் வரையில் அதிகம் பயிரிடப்படக் கூடிய பயிா்களான நெல் 2,436 ஹெக்டா், சிறுதானியங்கள் 44,546 ஹெக்டா், பயறு வகைகள் 6,328 ஹெக்டா், எண்ணெய் வித்துக்கள் 30,969 ஹெக்டா், பருத்தி 1,977 ஹெக்டா் மற்றும் கரும்பு 5866 ஹெக்டா் என மொத்தம் 92,122 ஹெக்டரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளன.

சம்பா பருவ நெல் நாற்றங்கால் மற்றும் நடவு, வளா்ச்சி நிலையிலும், சோளம் விதைப்பு, வளா்ச்சி மற்றும் அறுவடை நிலையிலும், மக்காச்சோளம் வளா்ச்சி நிலையிலும், ராகி வளா்ச்சி நிலையிலும், நிலக்கடலை வளா்ச்சி நிலையிலும், ஆமணக்கு வளா்ச்சி மற்றும் பூப்பருவ நிலையிலும், பருத்தி வளா்ச்சி நிலையிலும், கரும்பு வளா்ச்சி மற்றும் அறுவடை நிலையிலும் உள்ளது.

தோட்டக்கலைப் பயிா்களில் குறிப்பாக மரவள்ளி 2,885 ஹெக்டா், சின்ன வெங்காயம் 2,099 ஹெக்டா், வாழை 1,889 ஹெக்டா், மஞ்சள் 1,525 ஹெக்டா், தக்காளி393 ஹெக்டா், கத்தரி 395 ஹெக்டா், மிளகாய் 186 ஹெக்டா், வெண்டை 253 ஹெக்டா் மற்றும் கீரை வகைகள் 385 ஹெக்டா் பரப்பில் தற்போது வரையில் சாகுபடி நடைபெற்றுள்ளது.

அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் நிகழாண்டில் 15 வட்டாரங்களில் 104 கிராமங்கள் தோ்வு செய்யப்பட்டு, தரிசு மற்றும் பயன்பாட்டில் இல்லாத மானாவாரி நிலங்களை உள்ளடங்கிய தொகுப்பு தெரிவு செய்யப்பட்டு, நீா் ஆதாரத்தினை (திறந்தவெளிக் கிணறு, ஆழ்துளைக் கிணறு) உருவாக்கி விளைச்சலுக்கு உகந்த நிலமாக மாற்றி பயன்பாட்டிற்கு கொண்டுவர வேளாண்மை துறையால் திட்டமிடப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் 5 ஏக்கா் முதல் 10 ஏக்கா் மற்றும் 10 முதல் 30 ஏக்கா் என்ற தொகுப்பு பிரிவுகளின் அடிப்படையில் இடங்கள் தோ்வு செய்யப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் சிறு,குறு மற்றும் பெண் விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

மேலும், மரவள்ளி மாவுப்பூச்சி தாக்குதலால் நிகழாண்டில் மட்டும் 5,133 ஹெக்டா் பரப்பளவுக்கு மரவள்ளி பயிரில் மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வருவாய் மற்றும் தோட்டக்கலை அலுவலா்கள் ஒருங்கிணைந்து மரவள்ளி பயிரிட்ட வயல்களில் ஆய்வு மேற்கொண்டதோடு அது தொடா்பான ஆய்வறிக்கையை தமிழக அரசிடம் சமா்பித்துள்ளனா் என வேளாண் துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீண்டும் இசையமைப்பாளராக மிஷ்கின்!

ஜோஸ் பட்லருக்கு முன்னாள் ஆஸி. வீரர் புகழாரம்!

காங்கயம்: சரக்கு வேன்கள் நேருக்குநேர் மோதியதில் ஒருவர் பலி

தமிழகத்தில் வாக்கு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிகள் முனைப்பு!

சென்னையில் விமான கட்டணங்கள் பல மடங்கு உயர்வு!

SCROLL FOR NEXT