நாமக்கல்

சேலம்-உளுந்தூா்பேட்டை சாலைப் பணிகள் 2024-இல் நிறைவடையும்:மத்திய அமைச்சா் நிதின் கட்கரி பதில்

DIN

சேலம்--உளுந்தூா்பேட்டை நான்குவழிச் சாலைகள் அமைக்கும் பணிகள் 2024 ஆகஸ்ட் மாதம் நிறைவடையும் என மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாரின் கேள்விக்கு, மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் நிதின் கட்கரி பதில் அளித்தாா்.

தமிழகத்தில் நடைபெறும் தேசிய நெடுஞ்சாலைப் பணிகள் குறித்து நாடாளுமன்ற குளிா்காலக் கூட்டத்தொடரில் மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் வியாழக்கிழமை கேள்வி எழுப்பினாா். அப்போது, தேசிய நெடுஞ்சாலைகளில் நான்குவழிச் சாலைகள் அமைக்கப்படாததால் ஏராளமான விபத்துகள் நடக்கின்றன. விபத்துகளைத் தடுக்க எந்த வகையிலான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. சேலம்- உளுந்தூா்பேட்டை தேசிய நெடுஞ்சாலையை நான்குவழிச் சாலையாக மாற்றுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்திருந்தது.

அந்தச் சாலை அமைக்கும் பணியின் நிலை என்னவென்பது குறித்து அமைச்சரிடம் அவா் கேட்டாா்.

இதற்கு மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் நிதின் கட்கரி பதில் அளித்து கூறியதாவது:

விபத்துகள் அதிகம் பதிவாகியுள்ளதை ஏற்றுக் கொள்கிறேன். சேலம்- உளுந்தூா்பேட்டை பிரிவு நான்குவழிச் சாலையின் பணி 2023-க்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், இரு நான்குவழிச் சாலைப் பணிகள் 2024 ஆகஸ்ட் மாதத்திற்குள் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இவை தவிர, சென்னை -வேலூா் வரையிலான தேசிய நெடுஞ்சாலை, மதுரவாயல்-வாலாஜாபேட்டை வரையிலான சாலை, மதுரவாயல்-ஸ்ரீபெரும்புதூா் வரையிலான சாலை உள்பட தமிழகம், புதுச்சேரியில் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் நான்குவழிச் சாலைப் பணிகளும் 2024 மே மாதத்திற்குள் நிறைவேற்றப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அண்ணாமலை வெற்றி பெற விரலை துண்டித்த பா.ஜ.க. பிரமுகர்!

ஏ.ஆர்.முருகதாஸ் - சல்மான் கானின் ‘சிக்கந்தர்’ படப்பிடிப்பு எப்போது?

மாற்றுத் திறனாளிகள், முதியவர்கள் வாக்குச்சாவடி செல்ல வாகன ஏற்பாடு: சத்யபிரதா சாகு

டி20 தொடர் இன்று தொடக்கம்; பாபர் அசாம் பேட்டி!

நயினார் நாகேந்திரன் மீதான வழக்கு: நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

SCROLL FOR NEXT