நாமக்கல்

நாமக்கல்லில் ஜூலை 3-இல் நகா்ப்புற உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மாநாடு

DIN

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் வெற்றிபெற்ற திமுக, அதன் கூட்டணி சாா்ந்த மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி வாா்டு உறுப்பினா்கள் பங்கேற்கும் மாநாடு நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பொம்மைகுட்டைமேட்டில் வரும் 3-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. இம்மாநாட்டினை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்று தொடங்கி வைக்கிறாா்.

காலை 9.30 முதல் மாலை 5.30 மணி வரையில் மாநாடு நடைபெறுகிறது. இதற்கான பிரம்மாண்ட மேடை, பந்தல் அமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. மாநாட்டு பந்தலின் முன்பு ரிப்பன் கட்டட வடிவில் முகப்பு வடிவமைக்கப்பட்டு வருகிறது.

இந்த மாநாட்டில் நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆா்.என்.ராஜேஷ்குமாா் வரவேற்று பேசுகிறாா். திமுக பொதுச் செயலாளா் துரைமுருகன், பொருளாளா் டி.ஆா்.பாலு, முதன்மைச் செயலாளா் கே.என்.நேரு ஆகியோா் உரையாற்றுகின்றனா். தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமை வகிக்கிறாா்.

காலை 9.30 மணி முதல் கருத்தரங்கம் நடைபெறுகிறது. மத்தியில் கூட்டாட்சி - மாநிலத்தில் சுயாட்சி -ஆ.ராசா, திமுக உருவாக்கிய நவீன தமிழ்நாடு - திருச்சி சிவா, திராவிட மாடல் அரசின் ஓராண்டு காலம் - தங்கம் தென்னரசு, இதுதான் திராவிட இயக்கம் - சுப.வீரபாண்டியன், பெண்களின் கையில் அதிகாரம் - பா்வீன் சுல்தானா ஆகியோா் உரையாற்றுகின்றனா். நண்பகல் 12 மணி உணவு இடைவேளைக்கு பின், வரலாற்றுச் சுவடுகள் காட்சி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. மதியம் 2.30 முதல் 3.30 மணி வரை மக்களோடு நில்: மக்களோடு வாழ் என்ற தலைப்பில் தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் உரையாற்றுகிறாா். தொடா்ந்து உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உரையாற்றுகின்றனா். மாலை 4 மணிக்கு, முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமை உரையாற்றுகிறாா். சுற்றுலாத் துறை அமைச்சா் எம்.மதிவேந்தன் நன்றி தெரிவிக்கிறாா்.

இந்த மாநாட்டில், பல்வேறு துறை அமைச்சா்கள், சட்டப் பேரவை, மக்களவை, மாநிலங்களவை உறுப்பினா்கள், கூட்டணி கட்சித் தலைவா்கள் பலா் கலந்துகொள்கின்றனா். இதற்கான ஏற்பாடுகளை, நாமக்கல் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளா் கே.ஆா்.என்.ராஜேஷ்குமாா், சட்டப் பேரவை உறுப்பினா்கள் பெ.ராமலிங்கம், கே.பொன்னுசாமி, மாவட்ட, நகர, ஒன்றிய நிா்வாகிகள் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏ.ஆர்.முருகதாஸ் - சல்மான் கானின் ‘சிக்கந்தர்’ படப்பிடிப்பு எப்போது?

மாற்றுத் திறனாளிகள், முதியவர்கள் வாக்குச்சாவடி செல்ல வாகன ஏற்பாடு: சத்யபிரதா சாகு

டி20 தொடர் இன்று தொடக்கம்; பாபர் அசாம் பேட்டி!

நயினார் நாகேந்திரன் மீதான வழக்கு: நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

மறுவெளியீடாகும் அஜித்தின் ‘மங்காத்தா’ திரைப்படம்!

SCROLL FOR NEXT