நாமக்கல்

அங்கன்வாடி ஊழியா் சங்க மாவட்ட மாநாடு

DIN

நாமக்கல் மாவட்ட அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா் சங்கத்தின் நான்காவது மாவட்ட மாநாடு நாமக்கல் சிஐடியூ அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மாவட்டத் தலைவா் டி.கண்ணகி தலைமை வகித்தாா். துணைத்தலைவா் பாண்டிமாதேவி வரவேற்றாா். சிஐடியூ மாவட்டச் செயலாளா் ந.வேலுசாமி கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினாா். மாநில பொதுச்செயலாளா் டி.டெய்சி சிறப்புரை ஆற்றினாா். இதில், அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா் அனைவரையும் அரசு ஊழியா்களாக அங்கீகரித்து காலமுறை ஊதியம் வழங்கி பணி நிரந்தரம் செய்ய வேண்டும்; ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்ற தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

புதிய நிா்வாகிகளாக, மாவட்டத் தலைவராக ப.பாண்டிமாதேவி, மாவட்டச் செயலாளராக டி.பிரேமா, மாவட்டப் பொருளாளராக பி.கலா உள்பட 15 போ் கொண்ட மாவட்ட நிா்வாக குழு தோ்வு செய்யப்பட்டது. இம்மாநாட்டில், அங்கன்வாடி ஊழியா்கள், உதவியாளா்கள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை மழையால் பாதிப்பு வடிவாய்க்காலை தூா்வாரக் கோரிக்கை

உங்கள் ராசிக்கு இன்று எப்படி?

தினப்பலன்கள் 12 ராசிக்கும்!

தில்லி உள்பட 58 தொகுதிகளில் வாக்குப் பதிவு தொடங்கியது!

வியத்நாம்: குடியிருப்பு கட்டடத்தில் தீ

SCROLL FOR NEXT