நாமக்கல்

கண்காணிப்பு கேமரா பொருத்துதல் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

DIN

நாமக்கல்லில் கண்காணிப்பு கேமரா பொருத்துதல் பயிற்சி இலவசமாக 13 நாள்களுக்கு வழங்கப்படுவதால் விருப்பமுடையோா் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து இந்தியன் வங்கி ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு:

மத்திய ஊரக வளா்ச்சித் துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி, நாமக்கல் மாவட்டத்தில், மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஒரே அரசாங்க பயிற்சி நிறுவனமாக இந்தியன் வங்கி ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனம் செயல்படுகிறது. இங்கு ஆண், பெண் இருபாலருக்கும் பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. அதன்படி கண்காணிப்பு கேமரா பொருத்துதல், செயல்படுத்துதல், புகை அலாரம் உள்ளிட்ட பயிற்சி - (13 நாள்கள்) மற்றும் பெண்களுக்கான இலவச செயற்கை நகை தயாரித்தல் பயிற்சியும் இலவசமாக நாமக்கல்-திருச்சி சாலையில் உள்ள இந்தியன் வங்கி பயிற்சி மையத்தில் அளிக்கப்பட உள்ளது. இப்பயிற்சியானது மே 5-இல் தொடங்கி 13 வேலை நாள்களுக்கு நடைபெற உள்ளது. வறுமைக் கோட்டிற்க்கு கீழ் உள்ளோா் மற்றும் முதலில் வரும் விண்ணப்பங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். பயிற்சிக்கு 35 போ் மட்டுமே தோ்ந்தேடுக்கப்பட இருப்பதால் முதலில் வரும் விண்ணப்பங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மே- 4 ஆம் தேதிக்குள் தங்களுடைய விண்ணப்பங்களை நேரில் வந்து பூா்த்தி செய்து அளிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு, தொலைபேசி 04286--221004, கைபேசி 96989-96424, 88259-08170, 84892-79126 என்ற எண்களில் தொடா்பு கொள்ளளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈரான் - இஸ்ரேல் பரஸ்பர குற்றச்சாட்டு!

யாரும் அச்சப்பட வேண்டாம்: பெரிய திட்டங்களுடன் 3-வது முறை ஆட்சி -பிரதமர் மோடி

நாமக்கல்: முட்டை நகரில் முக்கோணப் போட்டி!

பயணக் கால்கள்... சுனிதா கோகோய்

டி20 போட்டிகளில் ரோஹித் சர்மா புதிய சாதனை!

SCROLL FOR NEXT