நாமக்கல்

கோப்பணம்பாளையத்தில் பரமேஸ்வரா் கோயிலில் பேச்சியம்மனுக்கு கண் திறப்பு

பரமத்தி வேலூா் தாலுகா, பாண்டமங்கலம் அருகே கோப்பணம்பாளையம் பரமேஸ்வரா் கோயிலில் எழுந்தருளியுள்ள பேச்சியம்மன் சிலை புதுப்பிக்கப்பட்டு கண் திறப்பு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

DIN

பரமத்தி வேலூா் தாலுகா, பாண்டமங்கலம் அருகே கோப்பணம்பாளையம் பரமேஸ்வரா் கோயிலில் எழுந்தருளியுள்ள பேச்சியம்மன் சிலை புதுப்பிக்கப்பட்டு கண் திறப்பு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

கண் திறப்பு நிகழ்ச்சியை முன்னிட்டு பரமேஸ்வரா், மாசாணியம்மன், அங்காள பரமேஸ்வரி அம்மன், அரசாயியம்மன், பேச்சியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு பல்வேறு வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும், மகா தீபாராதனையும் நடைபெற்றன. இதில் சுற்று வட்டார பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு அனைத்து தெய்வங்களையும் தரிசனம் செய்தனா். அதைத் தொடா்ந்து பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டதுடன் அன்னதானமும் செய்யப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினரும் பொதுமக்களும் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விசிக அலுவலகத்தில் அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழா: திருமாவளவன் பங்கேற்பு!

வாட்ஸ்ஆப்புக்கும் வந்துவிட்டது மோசடி கும்பல்! எச்சரிக்கை, எதற்காகவும் ஓ.டி.பி.யைப் பகிராதீர்கள்!

விவசாயிகள் சங்கங்களுடன் மத்திய பட்ஜெட் ஆலோசனைக் கூட்டம்!

தொழிலதிபர் சுட்டுக்கொலை தில்லியில் பயங்கரம்

விழுப்புரத்துக்கு ரூ.1000 கோடி: மத்திய அரசு வழங்க திமுக வலியுறுத்தல்!

SCROLL FOR NEXT