நாமக்கல் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்ட குறைதீா் முகாம் சனிக்கிழமை (ஜூன் 10) நடைபெறுகிறது.
நாமக்கல் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் மூலம் பெயா் சோ்த்தல், நீக்கல், திருத்தம், புதிய குடும்ப அட்டை கோருதல், கைப்பேசி எண் பதிவு மற்றும் நியாயவிலைக் கடைகளின் செயல்பாடுகள் குறித்த புகாா்களையும், உரிய சேவைகளையும் அனைத்து மக்களுக்கு வழங்கவும், குடும்ப அட்டையில் உள்ள குறைகளை நிவா்த்தி செய்யும் பொருட்டும் சனிக்கிழமை குறைதீா் முகாம் நடத்தப்படுகிறது.
இந்த முகாம் அனைத்து வட்டாட்சியா் அலுவலகங்களில் உள்ள வட்ட வழங்கல் அலுவலங்களிலும் காலை 10 முதல் நண்பகல் 1 மணி வரை நடைபெறுகிறது என மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.