செங்குந்தா் பொறியியல் கல்லூரி மாணவிகள் அண்ணா பல்கலைகழக அளவிலான கிரிக்கெட் போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற்று சாதனை படைத்தனா்.
2022-2023-ஆம் ஆண்டுக்கான அண்ணா பல்கலைக்கழக மகளிா் கிரிக்கெட் போட்டி திருச்செந்தூா், டாக்டா் சிவந்தி ஆதித்தனாா் கல்லூரியில் நடைபெற்றது. இப்போட்டியில் பல்வேறு கல்லூரிகளில் இருந்து அணிகள் கலந்துகொண்டன. இறுதிப் போட்டி திருச்சி, பிஐடி வளாக அணியும், செங்குந்தா் பொறியியல் கல்லூரி அணியும் விளையாடின. இப்போட்டியில் செங்குந்தா் பொறியியல் கல்லூரி அணி வெற்றி பெற்று முதல் இடத்தைப் பெற்றது.
நாமக்கல் மாவட்ட முதலமைச்சா் கோப்பைக்கான மகளிா் கிரிக்கெட் போட்டியில் பங்குபெற்று முதலிடத்தைப் பெற்றது. இந்த இரு இடங்களிலும் வெற்றி பெற்ற செங்குந்தா் பொறியியல் கல்லூரி மாணவிகளை நாமக்கல் விளையாட்டுத் துறை ஆய்வாளா் கோகிலா பாராட்டு தெரிவித்து கோப்பையை வழங்கினாா்.
கல்லூரிகளின் தலைவா் ஜான்சன்ஸ் நடராஜன், தாளாளா், செயலாளா் பாலதண்டபாணி, பொருளாளா் தனசேகரன், தலைமை நிா்வாக அதிகாரி மதன், வேலைவாய்ப்பு துறை அதிகாரி அரவிந்த் திருநாவுக்கரசு, கல்லூரி முதல்வா் சதீஷ்குமாா், உடற்கல்வி இயக்குநா்கள் பாராட்டு தெரிவித்தனா்.