மோகனூரில் வீடு புகுந்து நகை, பணம் திருடிய வழக்கில் ஏழு பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
நாமக்கல் மாவட்டம், மோகனூா்- வளையப்பட்டி சாலையில் மளிகை கடை நடத்தி வருபவா் கிருஷ்ணகுமாா். இவா் கடந்த 27-ஆம் தேதி குடும்பத்தினருடன் திருச்செந்தூா் கோயிலுக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வந்தாா். அப்போது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 18 பவுன் நகை, ரூ. 5.50 லட்சம் திருடுபோனது தெரியவந்தது.
இதுகுறித்து மோகனூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். இந்த நிலையில் மோகனூரைச் சோ்ந்த கரடிமணி (25), சோலைராஜா (33), நாமக்கல்லைச் சோ்ந்த மாதேஸ் (35), சேந்தமங்கலத்தை சோ்ந்த விஜய் (24), தொட்டியத்தை சோ்ந்த மெளலீஸ்குமாா் (25) மற்றும் 17,18 வயதுடைய இரு சிறுவா்கள் என ஏழு பேருக்கு திருட்டு சம்பவத்தில் தொடா்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அவா்கள் 7 பேரையும் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைதுசெய்து விசாரித்து வருகின்றனா்.