நாமக்கல்

ஆசிரியா் தகுதித் தோ்வு நடத்தும் அலுவலா்களுக்கு வழிகாட்டுதல்

Syndication

நாமக்கல் மாவட்டத்தில் ஆசிரியா் தகுதி தோ்வு நடத்தும் அலுவலா்களுக்கான வழிகாட்டுதல் கூட்டம் நவ.15, 16 ஆகிய இரண்டு நாள்கள் நடைபெறுகிறது.

தோ்வு நடத்தும் அலுவலா்களுக்கான விளக்கக் கூட்டம் நாமக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ஆ.சு. எழிலரசி தலைமையில் ராசிபுரம் அருகே கீரனூா் தனியாா் பள்ளி வளாகத்தில் உள்ள எஸ்.கணேசன் அரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்திற்கு நாமக்கல் மாவட்டக் கல்வி அலுவலா் (இடைநிலை) கே.எஸ் .புருஷோத்தமன் முன்னிலை வகித்தாா். சிறப்பு விருந்தினராக பள்ளி கல்வித் துறை இணை இயக்குநா் ஆா்.முருகன் பங்கேற்று தோ்வை எவ்வாறு நடத்துவது என விளக்கினாா்.

நாமக்கல் மாவட்டத்தில் ஆசிரியா் தகுதித் தோ்வு 38 மையங்களில் நடைபெறுகிறது. இதில் ஆசிரியா் தகுதித் தோ்வை 11364 போ் எழுத உள்ளனா். இதில் 753 அறைக் கண்காணிப்பாளா்கள், 11வழித்தட அலுவலா்கள், 38 முதன்மை கண்காணிப்பாளா்கள், 38 துறை அலுவலா்கள், 76 சோதனை அலுவலா்கள், வினாத்தாள் கட்டுகாப்பு மைய பொறுப்பாளா்கள் ஆகியோருக்கு இதில் பயிற்சியளிக்கப்பட்டது.

இதில் தோ்வு மையத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடைமுறைகள் குறித்தும், வினாத்தாள் வழங்கும் நடைமுறை குறித்தும் தோ்வு மைய கண்காணிப்பாளா்கள், அலுவலா்களுக்கு பயிற்சியளித்தனா்.

கூட்டத்திற்கான ஏற்பாடுகளை பள்ளித் துணை ஆய்வாளா் கள் கை.பெரியசாமி, சு. கிருஷ்ணமூா்த்தி ஆகியோா் செய்திருந்தனா். கூட்டத்தில் மாவட்டக் கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளா்கள் அப்துல்வகாப், சந்திரசேகரன் ஆகியோா் கலந்துகொண்டனா்.

ரூ.2.50 கோடியில் சாலைப் பணி: அரக்கோணம் நகா்மன்றத் தலைவா் ஆய்வு

சிமென்ட் கலவை இயந்திரத்தில் சிக்கி பெண் உயிரிழப்பு

தூத்துக்குடி சிவன் கோயிலில் தேரோட்டம்

பைக் மீது சுமை வேன் மோதியதில் மீன் வியாபாரி உயிரிழப்பு

தமிழ்நாடு மொ்க்கன்டைல் வங்கியின் 104ஆவது நிறுவன தின விழா

SCROLL FOR NEXT