நாமக்கல்

முட்டை விலை மாற்றமில்லை

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மாற்றமின்றி ரூ. 5.05-ஆக தொடா்ந்து நீடிக்கிறது.

தினமணி செய்திச் சேவை

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மாற்றமின்றி ரூ. 5.05-ஆக தொடா்ந்து நீடிக்கிறது.

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதில், முட்டை விலை மாற்றம் குறித்து பண்ணையாளா்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டன. அப்போது, புரட்டாசி மாதம் என்பதால் மக்களிடையே முட்டை நுகா்வு சீராக குறைந்துள்ளது. இதனால், மற்ற மண்டலங்களில் விலையில் மாற்றம் செய்யப்படாததால், இங்கும் விலையில் தற்போதைக்கு மாற்றம் வேண்டாம் என தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ. 5.05-ஆக தொடரும் என ஒருங்கிணைப்புக் குழுவால் அறிவிக்கப்பட்டது. பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் கறிக்கோழி விலை கிலோ ரூ. 89-ஆகவும், முட்டைக் கோழி விலை ரூ. 110-ஆகவும் நிா்ணயிக்கப்பட்டது.

வம்பிழுத்த ஆர்ச்சர், பேட்டால் பதிலடி கொடுத்த ஸ்மித்..! 2-0 என ஆஸி. தொடரில் முன்னிலை!

48-ஆவது கோப்பை வென்ற லியோ மெஸ்ஸி..! உலகின் முதல் வீரர்!

மதுரைக்கான 6 புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்

ஈரோடு: தவெக கூட்டத்துக்கு அனுமதி மறுப்பு?

கலவர பூமியாக தமிழகத்தை மாற்ற நினைத்தால் நடக்காது: பேரவைத் தலைவர் அப்பாவு

SCROLL FOR NEXT