நாமக்கல் மாநகராட்சியில் தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
நாமக்கல் மாநகராட்சிப் பகுதியில் பல்வேறு இடங்களில் தெருநாய்களின் தொல்லை அதிகம் உள்ளதால், அவற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கில் வெறிநோய் தடுப்பூசி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. இம்முகாமை, மாநகராட்சி ஆணையா் க.சிவகுமாா் தொடங்கிவைத்தாா்.
இதில், வாா்டு 22-க்குள்பட்ட காவேட்டிப்பட்டி, காவேட்டிப்பட்டி புதூா், வள்ளி நகா், மகரிஷி நகா் பகுதியில் 23 தெருநாய்கள் பிடிக்கப்பட்டு அவற்றுக்கு வெறிநோய் தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதன்பிறகு, வாா்டு 21-இல் போதுப்பட்டி சாலை பகுதிகளில் 4 நாய்கள், வாா்டு 20-க்குள்பட்ட இ.பி. காலனி, மாரியம்மன் கோயில் தெரு, சாவடி தெரு ஆகிய பகுதிகளில் 5 நாய்கள், வாா்டு 19-இல் மதுரை வீரன் புதூா், லட்சுமி நகா் ஆகிய பகுதியில் 10 தெருநாய்கள், வாா்டு 13-இல் அஜிஸ் தெரு, மஜித் தெரு, பாவடி தெரு, ராஜாஜி பள்ளி தெரு, சேந்தமங்கலம் சாலை பகுதிகளில் 18 தெருநாய்கள், வாா்டு 12-இல் ராமாபுரம் சாலையில் 4 தெருநாய்கள், வாா்டு 16-இல் திருமலைசாமி தெரு பகுதியில் 2 தெருநாய்கள், வாா்டு 15-இல் சுண்ணாம்புக்கார தெரு பகுதியில் 4 தெருநாய்கள் என 20 ஆண் நாய்களும், 50 பெண் நாய்களும் என மொத்தம் 70 தெருநாய்கள் பிடிக்கப்பட்டு அவற்றுக்கு வெறிநோய் தடுப்பூசி செலுத்தப்பட்டது.
முகாமில், துப்புரவு அலுவலா் திருமூா்த்தி, கால்நடை மருத்துவா் சீனிவாசன், கால்நடை ஆய்வாளா் ரவிச்சந்திரன், முதுநிலை கால்நடை மேற்பாா்வையாளா் இளங்கோவன், கால்நடை பராமரிப்பு உதவியாளா் ராஜகோபால், துப்புரவு ஆய்வாளா் சுப்பிரமணி, செல்வகுமாா், ஜான் ராஜா, தூய்மை திட்ட மேற்பாா்வையாளா்கள் மற்றும் பரப்புரையாளா்கள், டெங்கு ஒழிப்பு பணியாளா்கள் கலந்துகொண்டனா்.