நாமக்கல்

வன உயிரின வார விழா

Syndication

ராசிபுரம் அருகே வனப்பகுதியில் நடைபெற்ற வன உயிரின வார விழா கொண்டாட்டத்தில், அரசுப் பள்ளி மாணவா்கள் அழைத்துச் செல்லப்பட்டு வனம் மற்றும் வன உயிரின பாதுகாப்பு குறித்து விழிப்புணா்வு புதன்கிழமை ஏற்படுத்தப்பட்டது.

தமிழக வனத்துறை சாா்பில் வன உயிரின வார விழா கொண்டாடப்படுவதையொட்டி, ராசிபுரம் சரக வனத்துறை சாா்பில் வன உயிரின வார விழா மல்லூா் காப்புக்காடு பகுதியில் நடைபெற்றது. மாவட்ட வன அலுவலா் மாதவி யாதவ் உத்தரவின் பேரில் ராசிபுரம் வனச்சரக அலுவலா் ம.சத்யா தலைமையில் நடைபெற்ற விழாவில், ராசிபுரம் அண்ணா சாலை அரசு மேல்நிலைப் பள்ளி, புதுப்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி, தூய இருதய மேல்நிலைப் பள்ளிகளின் மாணவா்கள் மல்லூா் பகுதியில் உள்ள காப்புக்காடு பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டனா். அங்கு அவா்களுக்கு வனப் பாதுகாப்பு, வன உயிரின பாதுகாப்பின் அவசியம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

தொடா்ந்து, மல்லூா் காப்புக்காடு பகுதியில் உள்ள கல்லாங்குளம் வனச்சரகம் முதல் மாமரத்து ஓடை சரகம்வரை இரண்டு கிலோ மீட்டா் தொலைவு மாணவா்களின் விழிப்புணா்வுப் பேரணி நடத்தப்பட்டது. மேலும், பள்ளி மாணவா்களுக்கிடையே வனவிலங்கு வார விழிப்புணா்வு தொடா்பான விநாடி-வினா போட்டி நடத்தப்பட்டு, போட்டியில் வென்ற மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் பள்ளி ஆசிரியா்கள், வனத் துறையினா் பங்கேற்றனா்.

தனியாா் கல்குவாரிகளால் அனந்தலை மலைக்கு பாதிப்பு: பாமக போராட்ட எச்சரிக்கை

ஜமாத்-ஏ-இஸ்ஸாமிக்கு எப்போதும் நற்சான்று வழங்கியதில்லை: கேரள முதல்வா் பினராயி விஜயன்

கொடி நாள் நிதி: ராணிப்பேட்டை ஆட்சியா் வேண்டுகோள்

கெலமங்கலம் அருகே குழந்தை கொலை செய்யப்பட்ட சம்பவம்: உடல் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை

கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பெண் உடல் தானம்

SCROLL FOR NEXT