காளிப்பட்டி கந்தசாமி கோயிலில் வரும் 27-ஆம் தேதி சூரசம்ஹார திருவிழா சிறப்பாக நடைபெறுகிறது.
சேலம் - நாமக்கல் மாவட்டங்களில் எல்லையில் அமைந்துள்ள காளிப்பட்டி கந்தசாமி கோயிலில் சூரசம்ஹார திருவிழா மூன்று நாள்கள் நடைபெறுகிறது. அக் 26 இல் (ஞாயிற்றுக்கிழமை) காப்புக்கட்டி மூலவருக்கு சிறப்பு அலங்காரம், பூஜைகள் நடைபெறுகிறது. இரவு 7 மணிக்கு மாடவீதிகள் வழியாக சுவாமி திருவீதி உலா நடைபெறுகிறது. 27-ஆம் தேதி (திங்கள்கிழமை) கந்தசஷ்டியையொட்டி மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடைபெறுகின்றன. அன்று மாலை 3 மணி அளவில் திருக்கோயில் முன் சூரனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 28 ஆம் தேதி (செவ்வாய்கிழமை) காலை மயில்வாகனத்தில் சுவாமி நான்கு மாட வீதி வழியாக திருவீதி உலா, மாலையில் சுவாமிக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெறுகிறது. அன்று இரவு சுவாமி புறப்பாடு, ஊஞ்சல் விழா நடைபெறுகிறது.
விழா ஏற்பாடுகளை செயல் அலுவலா் கிருஷ்ணன், பரம்பரை அறங்காவலா் பூசாரி செல்வகுமாா் ஆகியோா் செய்து வருகின்றனா்.