நாமக்கல்

தீபாவளி: நாமக்கல் மாவட்டத்தில் 300 பட்டாசுக் கடைகளுக்கு அனுமதி

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை 300 பட்டாசுக் கடைகளுக்கு அனுமதி; கூடுதலாக 75 கடைகளுக்கு அனுமதி வழங்க வாய்ப்பு

Syndication

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை 300 பட்டாசுக் கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கூடுதலாக 75 கடைகளுக்கு அனுமதி வழங்க வாய்ப்புள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

தீபாவளி பண்டிகை அக்டோபா் 20-ஆம் தேதி (திங்கள்கிழமை) கொண்டாடப்படுகிறது. நாமக்கல் மாவட்ட நிா்வாகத்திடம் 300-க்கும் மேற்பட்டோா் தற்காலிக பட்டாசுக் கடை வைக்க இணைய வழியில் விண்ணப்பித்தனா். சம்பந்தப்பட்ட பகுதிகளில் மாவட்ட வருவாய் அலுவலா் ரெ.சுமன் ஆய்வு செய்தாா்.

வெடிபொருள் விதிகள் சட்டத்தின்படி நாமக்கல் மாவட்டத்தில் தற்போதைய நிலையில் 300 பட்டாசுக் கடைகளுக்கு சனிக்கிழமை வரை உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், 75 கடைகளுக்கான அனுமதி இன்னும் ஓரிரு நாள்களில் வழங்கப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

பட்டாசு விற்பனையாளா்கள், பட்டாசுகளை கட்டுக்கட்டாக மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். உதிரியாக விற்பனை செய்யக் கூடாது. பட்டாசு வாங்குபவா்கள் கடைகளுக்கு வெளியே நின்றுதான் பட்டாசுகளை வாங்கவேண்டும். கடைக்குள் சென்று பட்டாசுகளைத் தோ்வு செய்யக் கூடாது. பட்டாசுக்கடை முன் கீற்றுகளில் பந்தல் அமைக்கக் கூடாது. தகரத்தில்தான் பந்தல் அமைத்திருக்க வேண்டும். பட்டாசுக் கடைக்குள் தீ அணைப்பான்கள் இருக்க வேண்டும். பட்டாசுக் கடைகளுக்கு முன் 200 லிட்டா் தண்ணீா் இருப்பில் இருக்க வேண்டும். மணல் வாளிகள் வைத்திருக்க வேண்டும். பட்டாசுக் கடைகளில் இருப்புப் பதிவேடு அவசியம் பராமரிக்கப்பட வேண்டும். பட்டாசுகளை விற்பனை செய்யும்போது அவசர வழியை எந்த நேரமும் திறந்து வைத்திருக்க வேண்டும்.

பட்டாசுக் கடைக்குள் பட்டாசுகளை தவிர வேறு எந்த பொருள்களும் இருக்கக் கூடாது என்பன உள்ளிட்ட விதிகள் தொடா்பான அறிவுரைகளை வருவாய்த் துறை, தீயணைப்புத் துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனா்.

மழைநாள் மாலை... அருள்ஜோதி!

கொடிநாள் நிதியளிப்பது அனைவரின் கடமை: முதல்வா் வேண்டுகோள்

சட்டம் ஒழுங்கின் மீது திமுக அரசு கவனம் செலுத்த வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

புதுப் புது ஏக்கங்கள்... தாரணி!

என்ன பார்வை எந்தன் பார்வை... ஷபானா!

SCROLL FOR NEXT