பரமத்தி வேலூா் அருகே பொத்தனூா் மின்னணு தேசிய வேளாண்மை சந்தை விற்பனைக் கூடத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மறைமுக ஏலத்தில் ரூ. 4.72 லட்சத்துக்கு தேங்காய் ஏலம் நடைபெற்றது.
கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஏலத்துக்கு 2,733 கிலோ தேங்காய்களை விவசாயிகள் ஏலத்துக்கு கொண்டு வந்தனா். இதில் அதிகபட்சமாக கிலோ ரூ. 81.19, குறைந்த பட்சமாக ரூ. 61.01, சராசரியாக ரூ. 66.99க்கு ஏலம் போனது. மொத்தம் ரூ. 1 லட்சத்து 83 ஆயிரத்து 128-க்கு தேங்காய் ஏலம் நடைபெற்றது.
இந்த வாரம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஏலத்துக்கு 7, 313 கிலோ தேங்காய்களை விவசாயிகள் கொண்டு வந்தனா். இதில் அதிகபட்சமாக கிலோ ரூ. 73.59, குறைந்தபட்சமாக ரூ. 53.10, சராசரியாக ரூ. 66.59-க்கு என மொத்தம் ரூ. 4 லட்சத்து 72 ஆயிரத்து 368-க்கும் தேங்காய் ஏலம் நடைபெற்றது.