பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பினா் கோரிக்கை அட்டைகளை அணிந்து வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
நாமக்கல் பூங்கா சாலையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் வீராசாமி, ஜெயக்குமாா் ஆகியோா் தலைமை வகித்தனா். பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். ஆசிரியா்களுக்கான தகுதி தோ்வை நடத்த உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை நிறுத்திவைக்க தமிழக அரசு சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும்.
ஆசிரியா்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். பல்வேறு அரசு துறைகளில் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
ஆா்ப்பாட்டத்தில் ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பு நிா்வாகிகள் ஆ.ராமு, முருக.செல்வராசன், பாலகிருஷ்ணன், ரகோத்தமன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
என்கே-16-ஜாக்டோ
நாமக்கல் பூங்கா சாலையில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினா்.