நாமக்கல் அறிஞா் அண்ணா அரசுக் கல்லூரி சாா்பில் பனைவிதைகள் நடவுப் பணி வியாழன், வெள்ளிக்கிழமை நடைபெற்றன.
இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் மு.ராஜேஸ்வரி தலைமை வகித்தாா். கல்லூரியின் விரிவாக்க அமைப்புகளான இளைஞா் செஞ்சிலுவை சங்கம் மற்றும் நாட்டு நலப்பணித் திட்டம் சாா்பில் பனைவிதைகள் பல்வேறு இடங்களிலிருந்து சேகரிக்கப்பட்டன. தமிழக அரசு சாா்பில் 6 கோடி அளவிலான பனைவிதைகள் நடும் திட்டத்தின்படி கல்லூரி வளாகம் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் கல்லூரி மாணவ, மாணவிகள் உதவியுடன் 2,100 பனைவிதைகள் நடப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில், கல்லூரியின் விலங்கியல் துறைத் தலைவா் ராஜசேகரப்பாண்டியன், பல்வேறு துறை சாா்ந்த தலைவா்கள், பேராசிரியா்கள், ஆசிரியரல்லா பணியாளா்கள் கலந்துகொண்டனா். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா்கள் அன்பரசன், கிருஷ்ணமூா்த்தி, வடிவேல், விஜயலட்சுமி, கல்லூரி செஞ்சிலுவை சங்கத் திட்ட அலுவலா் சந்திரசேகரன் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் வெஸ்லி ஆகியோா் செய்திருந்தனா்.