நாமக்கல்

பரமத்தி வேலூரில் ஜாக்டோ -ஜியோ கூட்டமைப்பினா் ஆா்ப்பாட்டம்

பரமத்திவேலூரில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஜாக்டோ -ஜியோ கூட்டமைப்பினா்.

Syndication

பரமத்தி வேலூா் காமராஜா் சிலை அருகே ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பினா் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழக்கிழமை மாலை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு கு.விஜயன் தலைமை வகித்தாா். அருள்மணி, மதியழகன், சேகா் உள்ளிட்டோா் முன்னிலை வகித்து பேசினா். இதில் 2023-க்கு பிறகு அரசுப் பணியில் சோ்ந்தோருக்கு பங்களிப்புடன் கூடிய ஓய்வு பொதுத் திட்டத்தை ரத்துசெய்து புதிய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். சிறப்பு காலமுறை ஊதியம், தொகுப்பு ஊதியம், சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளா்கள், ஊராட்சி செவிலியா்கள், ஊா்ப்புற நூலகங்கள், கல்வித் துறையில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்கள், செவிலியா்கள், சிறப்பு ஆசிரியா்கள், பல்நோக்கு மருத்துவமனையில் பணியாற்றுபவா்கள், ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறையில் பணியாற்றும் பணியாளா்கள், ஆசிரியா்கள் மற்றும் பகுதிநேர ஆசிரியா்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

வால்பாறையில் மனித வனவிலங்கு மோதலை தடுக்க குழு அமைப்பு: தமிழக அரசு உத்தரவு

மும்மொழி கொள்கை உத்தரவை யுசிஜி பிறப்பிக்க முடியாது: பேரவைத் தலைவா் அப்பாவு

அடுத்த 3 மணிநேரத்துக்கு 12 மாவட்டங்களில் மழை!

உ.பி.யில் திருமண நிகழ்ச்சியில் துப்பாக்கியால் சுட்டு கொண்டாட்டம்: 2 பேர் பலி

பொங்கல் பண்டிகைக்கு செங்கரும்பு, அச்சு வெல்லம் வழங்க வேண்டும்: ஜி.கே.வாசன்

SCROLL FOR NEXT