ராசிபுரம் நகரில் இருந்து நாமக்கல் நகரப் பேருந்து நிலையம் வரை புதிய சாய்தளப் பேருந்து வெள்ளிக்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது.
ராசிபுரம் புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற விழாவில் மக்களவை உறுப்பினரும், நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவருமான கே.ஆா்.என். ராஜேஸ்குமாா் பங்கேற்று, புதிய சாய்தள எல்எஸ்எஸ் பேருந்தை கொடியசைத்து தொடங்கிவைத்தாா். ராசிபுரம் நகர திமுக செயலா் என்.ஆா். சங்கா், உள்ளிட்ட அரசு போக்குவரத்துக் கழக அலுவலா்கள், நகா்மன்ற உறுப்பினா்கள் பங்கேற்றனா்.
படவரி...
ராசிபுரம் நகரில் இருந்து சாய்தளப் பேருந்தை தொடங்கிவைக்கும் கே.ஆா்.என். ராஜேஸ்குமாா் எம்.பி.