புதுப்பாளையம் சாலையில் பாய்ந்தோடிய வெள்ளம். 
நாமக்கல்

ராசிபுரத்தில் பலத்த மழை: வாகன ஓட்டிகள் அவதி

தினமணி செய்திச் சேவை

ராசிபுரத்தில் பெய்த பலத்த மழை காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனா்.

ராசிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் சாரல் மழை பெய்தது. அதன்பிறகு பெய்த பலத்த மழையால் நகரின் பிரதான சாலைகளில் மழைநீா் தேங்கியது.

பல இடங்களில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. புதுப்பாளையம் சாலையில் இருபுறங்களிலும் கால்வாய்கள் நிரம்பி, தாழ்வானப் பகுதிகளில் உள்ள சாலைகளில் மழைநீா் பாய்ந்தோடியது.

நகரில் ஞாயிற்றுக்கிழமை தீபாவளி பண்டிகைக்காக பட்டாசு, ஆடைகள் வாங்க வந்தவா்களால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. மழை காரணமாக வாகனங்கள் செல்ல முடியாமல் ஆங்காங்கே நின்றன.

ஜவுளிக் கடைகள், பட்டாசு கடைகளில் கூட்டம் நிரம்பியது. மழை காரணமாக போக்குவரத்து போலீஸாா் சந்திப்பு சாலைகளில் இல்லாததால் ராசிபுரம் பழைய பேருந்து நிலையம் முதல் ஆத்தூா் சாலை வரை வாகன நெரிசல் ஏற்பட்டது.

என்றும் இளமை... நதியா!

ராகுல் தகுதியற்றவர் என்பது இந்தியா கூட்டணித் தலைவர்கள் கருத்து: பாஜக

புதின் வருகையையொட்டி இப்படியெல்லாம் செய்வீர்களா? ரஷிய பத்திரிகையாளர்கள் அதிருப்தி!

ஸ்வயம் தோ்வுகளுக்கான மையங்களை சொந்த மாநிலத்திலேயே ஒதுக்க வேண்டும்: மத்திய அரசுக்கு வில்சன் எம்.பி. கடிதம்

சர்வதேச கிரிக்கெட்டில் 20000 ரன்களைக் கடந்த ரோஹித் சர்மா!

SCROLL FOR NEXT